மக்களே மறந்துடாதீங்க.. இன்றிலிருந்து பழைய ஆன்ட்ராய்டு வெர்சனில் வாட்ஸ் ஆப் வொர்க் ஆகாது!
டெல்லி: நவம்பர் 1ஆம் தேதியான இன்று முதல் வங்கி, சமையல் சிலிண்டர், பென்ஷன்தாரர்கள் பிரிவில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு அவை இன்று முதல் நடைமுறைக்கு வர இருக்கின்றன.
Recommended Video
இந்த மாற்றங்களில் சில மக்களை பாதிக்கும்படியும், சில மாற்றங்கள் மூலம் மக்கள் வருவாய் ஈட்டும்படியும் இருக்கின்றன. இவையெல்லாம் தீபாவளி பண்டிகைக்கு முன்பே நடைமுறைக்கு வருகிறது. தொழில்நுட்ப துறையில் கூட சில மாற்றங்கள் இன்று முதல் அமல்படுத்தப்படுகின்றன.
முதலில் சமையல் கேஸ் சிலிண்டர் விலை குறித்து பார்ப்போம். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப ஒவ்வொரு மாதத்தின் முதல் தேதியும், 15 ஆம் தேதியும் சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்படும். அந்த வகையில் இன்று முதல் சிலிண்டர் விலை உயர்த்தப்படுகிறது.

சிலிண்டர்கள் முன்பதிவு
அது போல் வீடுகளில் சிலிண்டர் முன்பதிவு செய்வதில் புதிய முறை இன்று முதல் கையாளப்படுகிறது. வீடுகளில் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் முன்பதிவு செய்யும் போது இனி பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு ஓடிபி (ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் எண்) எண் வரும். அந்த ஓடிபி எண்ணை சிலிண்டரை டெலிவரி செய்ய வரும் நபரிடம் சொன்னால் மட்டுமே சிலிண்டர் என்ற நடைமுறை இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.

ரயில்கள் புறப்படும் நேரம்
அது போல் இன்று முதல் இந்திய ரயில்வேயில் பல்வேறு ரயில்களின் புறப்படும் நேரம், அது சென்றடையும் நேரம் மாற்றியமைக்கப்பட்டு புதிய அட்டவணை அமலுக்கு வருகிறது. இதற்கு முன் கடந்த 1ஆம் தேதி அமலுக்கு வருவதாக கூறப்பட்டு 31 ஆம் தேதி தள்ளிவைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று முதல் புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது. 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் ரயில், 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சரக்குகள் ரயில் நேரங்களில் மாற்றம் செய்யப்படுகிறது.

வீடியோ கால்
ஓய்வூதியம் பெறுவோருக்கு பாரத ஸ்டேட் வங்கி புதிய வசதியை இன்று முதல் அமலுக்கு கொண்டு வருகிறது. அதன்படி ஓய்வூதியதாரர்கள் லைஃப் சான்றிதழை (வாழ்நாள் சான்று) வழங்க நேரடியாக வங்கிக்கு செல்ல தேவையில்லை. வீடியோ கால் செய்து தங்கள் இருப்பை தெரிவிக்கலாம். இது இன்று முதல் அமலாகிறது.

பணம் சம்பாதித்தல்
அது போல் முதலீட்டாளர்கள் பணம் சம்பாதிக்கவும் ஒரு வாய்ப்பு இன்று முதல் அமைகிறது. காப்பீட்டு பாலிசிகளை விற்பனை செய்யும் நிறுவனமான பாலிசி பஸார் ஐபிஓ மூலம், கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை முதலீடு செய்யலாம். அது போல் பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் வாடிக்கையாளர்கள் இன்று முதல் தங்கள் வங்கிக் கணக்கில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் பணத்தை டெபாசிட் செய்யவும் எடுக்கவும் குறைந்தபட்ச கட்டணம் செலுத்த வேண்டும் என்ற விதியும் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

போன்கள்
பேஸ்புக்கின் மெசேஜிங் செயலியான வாட்ஸ் ஆப் இன்று முதல் பல ஸ்மார்ட்போன்களில் வேலை செய்யாது. அதாவது ஆன்ட்ராய்டு ஓஎஸ் 41 அதற்கு மேல் சப்போர்ட் செய்யும் ஸ்மார்ட்போன் உள்ளவர்கள் மற்றும் ஐஓஎஸ் 10 மற்றும் அதற்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே வாட்ஸ் ஆப்பை பயன்படுத்த முடியும். எனவே இன்று முதல் மேற்கண்ட தளங்கள் இல்லாத போன்களில் வாட்ஸ் ஆப் இல்லை.
-
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications