ஆதார் அப்டேட் முதல் மாலத்தீவுகளுக்கான சுற்றுலா கட்டணம் வரை! நாளை முதல் டோட்டலாக மாறுது!
டெல்லி: நாடு முழுவதும் நாளை (டிசம்பர் 1) முதல் புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன. அதாவது சிலிண்டர் விலை முதல் திவால் விதிகள் வரை நாளை (டிசம்பர் 1) முதல் மாறப் போகிறது.
மாதந்தோறும் சிலிண்டர் விலை உள்ளிட்டவைகளில் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. அந்த வகையில் டிசம்பர் 1 நாளை பிறக்கும் நிலையில் புதிய மாற்றங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

சிலிண்டர் விலை: எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் சமையல் சிலிண்டரின் விலையை மாற்றி வருகின்றன. அந்த வகையில் அக்டோபர் மாதம் முதல் திருத்தியமைக்கப்படும். அன்றைய தினம் காலை 6 மணி முதல் புதிய விலை அமலுக்கு வரும். இந்த விலை மாற்றங்கள் வீட்டு பட்ஜெட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஆதார் அட்டை அப்டேட்: ஆதார் விவரங்களை இலவசமாக புதுப்பிப்பதற்கான காலக்கெடுவை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) நீட்டித்துள்ளது. ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் டிசம்பர் 14 ஆம் தேதி ஆன்லைன் மூலம் எந்த கட்டணமும் இன்றி தங்கள் பெயர், முகவரி அல்லது பிறந்த தேதியை புதுப்பிக்கலாம். இந்த தேதிக்கு பிறகு செய்யப்படும் புதுப்பிப்புகளுக்கு கட்டணம் விதிக்கப்படும்.
ஐடிஆர் தாக்கல்: ஜூலை 31 காலக்கெடுவிற்குள் 2023- 2024 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்யத் தவறிய நபர்கள் டிசம்பர் மாதத்திற்குள் தங்கள் ITRஐ சமர்ப்பிக்க இன்னும் வாய்ப்புள்ளது. ஆரம்ப காலக்கெடுவைத் தவறவிட்டவர்கள் இப்போது டிசம்பர் 31 ஆம் தேதி வரை அபராத கட்டணத்துடன் தாமதமான ITRஐத் தாக்கல் செய்யலாம். தாமதக் கட்டணம் ரூ 5000. மொத்த வருமானம் ரூ 5 லட்சத்திற்கும் குறைவான வரி செலுத்துவோருக்கு இந்த தாமதக் கட்டணம் ரூ 1000 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
டிராய் காலக்கெடு: பயனாளிகள் எதிர்கொள்ளும் மோசடி நடவடிக்கைகளை தடுக்க இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) வணிகச் செய்திகளுக்கான டிரேஸ்பிலிட்டி ஆணைகளை நாளை முதல் அமல்படுத்துகிறது. இந்த நடவடிக்கை ஓடிபிகள் மற்றும் பிற முக்கிய தகவல்கள் உள்ளடக்கிய பரிவர்த்தனைகளைப் பாதுகாப்பதே நோக்கமாகக் கொண்டுள்ளது.
மாலத்தீவுகளுக்கான கட்டணம் அதிகரிப்பு: மாலத்தீவுகளுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளிடம் வசூலிக்கும் எக்சிட் கட்டணம் (நாட்டை விட்டு வெளியேறும் போது சுற்றுலா பயணிகளிடம் விமான டிக்கெட்டுடன் வசூலிக்கும் கட்டணம்) 67 சதவீதம் முதல் 167 சதவீதம் வரை உயர்த்தப்படுகிறது. எக்கானிமிக் கிளாலி ரூ 2,532 லிருந்து ரூ 4220 ஆக உயர்த்தப்படுகிறது. அது போல் பிசினஸ் கிளாஸ் பயணிகளுக்கு ரூ 5,064 லிருந்து ரூ 10,129 ஆக விமானக் கட்டணம் உயர்கிறது. முதல் வகுப்பு பயணிகளுக்கான கட்டணம் 20,257 ரூபாயாகும்.
கிரெடிட் கார்டு மாற்றங்கள் : டிசம்பர் 1 முதல் விமானங்கள் மற்றும் ஹோட்டல்களுக்கான ரிவார்டு பாயிண்ட் எண்ணிக்கையை யெஸ் வங்கி கட்டுப்படுத்தும். புதிய விதிகளின் படி டிசம்பர் 1 முதல் லவுஞ்ச் அணுகலுக்கு தகுதி பெற பயனர்கள் ஒவ்வொரு காலாண்டிலும் ரூ 1 லட்சம் செலவழிக்க வேண்டும். அது போல் எஸ்பிஐ, ஆக்ஸிஸ் வங்கி உள்ளிட்டவைகளும் புள்ளி விதிகள் மற்றும் கிரெடிட் கார்டு கட்டணங்களை திருத்தியுள்ளது.
திவால் விதிகள்: நாளை முதல் அறிமுகமாகும் புதிய திவால் விதிமுறைகள் தாக்கல் செய்யும் நடைமுறைகளை எளிதாக்கும். சிறுவணிகர்களுக்கான சிக்கல்கள் குறையும்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications