முட்டையில் கேன்சரை ஏற்படுத்தும் ரசாயனமா? பீதியில் ஆழ்த்திய தகவல்.. FSSAI கொடுத்த விளக்கம்
டெல்லி: பலரும் விரும்பி சாப்பிடும் முட்டையில், புற்று நோய் காரணியான நைட்ரோஃப்யூரான் மெட்டாபோலைட்டுகள் (AOZ) என்ற ஆன்டிபயாடிக் இருப்பதாக தகவல் பரவி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த நிலையில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) நம் நாட்டில் உள்ள முட்டைகள் அனைத்தும் பாதுகாப்பானவை என தெளிவுபடுத்தி இருக்கிறது.
மக்களின் உணவு பொருட்களில் தவிர்க்க முடியாத ஒன்றாக முட்டை உள்ளது. முட்டையில் பல்வேறு சத்துகள் உள்ளன. குறிப்பாக முட்டையில் உள்ள வெள்ளை மற்றும் மஞ்சள் கருவில் புரதம், பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், சோடியம், வைட்டமின் பி12, கொழுப்பு சத்து இருப்பதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுகிறார்கள்.

முட்டை சாப்பிட்டால் புற்று நோய் வருமா?
அசைவ உணவு பிரியர்களின் சாப்பாட்டு தட்டில் முட்டை தவிர்க்க முடியாத இடத்தை பிடித்திருக்கும். முட்டையை பொறுத்தவரை பண்ணைகள் அமைத்து பெரிய அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதற்காக பண்ணைகளில் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இந்த நிலையில்தான் முட்டை சாப்பிட்டால் புற்றுநோய் வரும் என, சில நாட்களாக வெளியான தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நாடு முழுவது ஆய்வு
அதாவது முட்டையில் "நைட்ரோஃப்யூரான்" எனப்படும் ஆன்டிபயாடிக் இருப்பதாக சர்ச்சை எழுந்தது. உணவு பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுத்துள்ளது. அனைத்து முட்டை உற்பத்தி நிறுவனங்களின் மாதிரிகளையும் சேகரித்து, அவற்றில் தடை செய்யப்பட்ட ஆன்டிபயாடிக் மருந்துகள் உள்ளதா என்பதை பரிசோதித்து உடனடியாக அறிக்கை அளிக்க வேண்டும் என FSSAI அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உடலுக்கு எந்த தீங்கும் ஏற்படுத்தாது
இதன்படி நாடு முழுவதும் பிராண்ட் மற்றும் நான் பிராண்ட் முட்டைகளை ஆய்வு செய்தது. இந்த ஆய்வுக்கு பிறகு வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவில் விற்பனை செய்யப்படும் முட்டைகள் மிகவும் பாதுகாப்பானது. உடலுக்கு எந்த தீங்கும் ஏற்படுத்தாது. முட்டைகளில் புற்றுநோய் காரணிகளான நைட்ரோஃப்யூரான் மெட்டாபோலைட்டுகள் (AOZ) இருப்பதாக பரவிய சமூக ஊடக வதந்திகள் தவறானவை.
அறிவியல் பூர்வமற்றவை. தேவையற்ற பொது பீதியை ஏற்படுத்துகிறது. சாதாரண முட்டை நுகர்வுக்கும் புற்றுநோய் அபாய அதிகரிப்புக்கும் தேசிய, சர்வதேச சுகாதார அமைப்புகள் எந்தத் தொடர்பும் உறுதிப்படுத்தவில்லை" என்று தெரிவித்துள்ளது.
திடீரென வதந்தி பரவ காரணம்?
பிரபல 'Eggoz' பிராண்ட் முட்டைகளில் நைட்ரோஃப்யூரான்களின் சிறிய அளவிலான மாதிரிகள் கண்டறியப்பட்டதாக எழுந்த அறிக்கைதான் இந்த சர்ச்சைக்குக் காரணமாக அமைந்தது. 2011 ஆம் ஆண்டு உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஒழுங்குமுறைகளின்படி, கோழித் தீவனம் உட்பட நைட்ரோஃப்யூரான்கள் பயன்பாடு கடுமையாகத் தடைசெய்யப்பட்டுள்ளது. இதை உறுதிப்படுத்த, FSSAI இந்த வாரத்தின் தொடக்கத்திலேயே பிராண்டட், பிராண்ட் இல்லாத முட்டைகளில் நாடு தழுவிய மாதிரிகள் ஆய்வு செய்ய உத்தரவிட்டது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications