Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பலாத்கார குற்றசாட்டுக்குள்ளான நித்யானந்தா அயோத்தி போகிறார்? அழைப்பு வந்ததாம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நாளை நடைபெறும் நிலையில், இதில் கலந்து கொள்ளப்போவதாக இந்தியாவில் தலைமறைவாக உள்ள நித்தியானந்தா அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமர் பிறந்ததாக நம்பப்படும் உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமருக்கு பிரம்மாண்ட கோயில் கட்டப்பட்டு வருகிறது. மூன்று தளங்களில் கோயில் கட்டப்பட்டுள்ள நிலையில், அதன் கும்பாபிஷேகம் நாளை நடைபெறுகிறது. இதற்குத் தேவையான ஏற்பாடுகள் அயோத்தியில் செய்யப்பட்டு வருகிறது.

 Fugitive Samiyar Nithyananda says he will attend to Ram temple inauguration

அயோத்தியில் இப்போது பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாளை பிரதமர் மோடி தொடங்கி பல்வேறு தலைவர்கள் அயோத்திக்கு வரும் நிலையில், ஏற்கனவே பெர்மிட் உள்ளவர்களைத் தவிர யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒட்டுமொத்த அயோத்தி நகரமும் இப்போது போலீஸ் பாதுகாப்பில் இருக்கிறது.

அயோத்தி ராமர் கோயில்: இதற்கிடையே அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்வில் கலந்து கொள்ளப் போவதாகக் கூறியுள்ளார் தலைமறைவாக உள்ள சாமியார் நித்தியானந்தா.. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அயோத்தியில் நாளை நடைபெறும் ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவதாகவும் நித்தியானந்தா கூறியுள்ளார். பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் சிக்கி இப்போது தலைமறைவாக உள்ள நித்தியானந்தாவின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கைலாசா: இந்தியாவில் தேடப்பட்டு வரும் குற்றவாளியான நித்தியானந்தா கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கியுள்ளதாக அவரே கூறி வருகிறார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "இந்த வரலாற்று மற்றும் அசாதாரண நிகழ்வைத் தவறவிடாதீர்கள்! அயோத்தி கோயிலில் ராமர் பிரதிஷ்டை செய்யப்படுகிறார். இது உலகம் முழுவதையும் அலங்கரிக்கும் ஒரு நிகழ்வாகும்.

முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்து மதத்தின் உயர் மதத் தலைவர் (நித்தியானந்தாவை அவரது ஆதரவாளர்கள் அப்படி தான் அழைப்பார்கள்) பகவான் ஸ்ரீ நித்தியானந்த பரமசிவம் இந்த மாபெரும் நிகழ்வில் கலந்துகொள்வார்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

யார் இந்த நித்தியானந்தா: தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் தான் இந்த நித்தியானந்தா.. இவர் கர்நாடகாவில் பிடதியில் ஆசிரமத்தை நடத்தி வந்தார். அப்போது தான் அவர் மீது திடீரென பாலியல் புகார்கள் எழுந்தன. மேலும், அவர் சினிமா நடிகை ஒருவர் நெருக்கமாக இருக்கும் காட்சிகளும் வெளியானது. இந்தச் சம்பவம் அப்போது தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நித்தியானந்தாவின் டிரைவர் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அவர் ஜாமீனில் வெளியே வந்திருந்த நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டில் அவர் திடீரென இந்தியாவை விட்டு வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றார். இதற்கிடையே சில காலமாக இந்துக்களுக்காகத் தனியாக கைலாசா என்ற நாட்டை உருவாக்கியுள்ளதாக அவரே சொல்லி வருகிறார். மேலும், தனது நாட்டை அமெரிக்கா மற்றும் ஐநா சபை எல்லாம் அங்கீகரித்துவிட்டதாக அவர் கூறுகிறார்.

இருப்பினும், அந்த நாடு எங்கே இருக்கிறது. அது பார்க்க எப்படி இருக்கும் என்று கூட யாருக்கும் தெரியாது. அவரை போலீசார் இன்னுமே கூட தேடித் தான் வருகிறார்கள். இந்தச் சூழலில் தான் அவர் திடீரென அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு வருவதாகத் தடாலடியாக அறிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+