மகிழ்ச்சி! "ஆக்கப்பூர்வமாக இருந்தது.." அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்த பின் பிரதமர் மோடி ட்வீட்!
டெல்லி: டெல்லி: ஜி 20 உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு ட்வீட் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, அமெரிக்க அதிபருடனான பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமானதாக இருந்ததாக பதிவிட்டுள்ளார்.
இந்தியா அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, உருசியா, சவுதி அரேபியா, தென்ஆப்பிரிக்கா, தென்கொரியா, துருக்கி, பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பியா ஒன்றியம் உள்ளிட்ட நாடுகள் ஜி 20 மாநாட்டில் அங்கம் வகிக்கின்றன. இந்த ஆண்டு ஜி 20 மாநாட்டுக்கு இந்தியா தலைமை வகிக்கிறது.

அதன்படி தலைநகர் டெல்லியில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஜி 20 மாநாடு நடைபெறுகிறது. இங்கு நடைபெறும் மாநாட்டுக்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. சர்வதேச நாடுகளின் தலைவர்கள் இந்தியாவில் ஒன்றாக அணி திரண்டு பங்கேற்க உள்ளனர். அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்தின் பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், ஆஸ்திரேலியா பிரதமர், சவுதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மான் என ஏராளமான தலைவர்கள் டெல்லியில் நடைபெறும் ஜி 20 மாநாட்டில் பங்கேற்கின்றனர்.
டெல்லிக்கு வரும் வெளிநாட்டு தலைவர்கள் தங்குவதற்காக டெல்லியில் உள்ள முக்கியமான நட்சத்திர விடுதிகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. தற்போதே உச்ச கட்ட பாதுகாப்பு வளையத்திற்குள் தலைவர்கள் தங்கும் நட்சத்திர ஓட்டல்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஜி 20 மாநாடு நாளை தொடங்க உள்ள நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று மாலை 6. 55 மணி அளவில் டெல்லி வந்தடைந்தார்.
ஏர்போர்ஸ் ஒன் என்ற தனி விமானம் மூலம் வந்த ஜோ பைடன் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இரு நாட்டு தலைவர்களும் இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவை பலப்படுத்துவது உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடனான சந்திப்பு குறித்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
Happy to have welcomed @POTUS @JoeBiden to 7, Lok Kalyan Marg. Our meeting was very productive. We were able to discuss numerous topics which will further economic and people-to-people linkages between India and USA. The friendship between our nations will continue to play a… pic.twitter.com/Yg1tz9kGwQ
— Narendra Modi (@narendramodi) September 8, 2023
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்த பிறகு பிரதமர் மோடி பதிவிட்டுள்ள ட்வீட்டில் கூறியிருப்பதாவது:- லோக்சவன் கல்யாண் மார்க்கிற்கு அமெரிக்கா அதிபரை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமானதாக இருந்தது. பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினோம். இந்தியா - அமெரிக்கா இடையேயான நட்பு உலக நாடுகளின் நன்மைக்கு தொடர்ந்து பங்கு அளிக்கும். இவ்வாறு பிரதமர் மோடி ட்வீட் பதிவிட்டுள்ளார்.
-
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி












Click it and Unblock the Notifications