டெல்லி ஜி20 மாநாடு: பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் செய்த 'காரியம்'.. போட்டோ பார்த்து கொண்டாடும் உலகம்!
டெல்லி: டெல்லி ஜி 20 உச்சி மாநாட்டில் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் மிக இயல்பாக, பவ்யமாக அமர்ந்து பேசும் படம் உலகம் முழுவதும் பெருமிதத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
பிரிட்டன் பிரதமரான ரிஷி சுனக் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். டெல்லியில் கால் வைத்த போதே பிரதமர் நரேந்திர மோடி 'நமஸ்காரம்' சொன்னார். பின்னர் கிழக்கு டெல்லியில் உள்ள அக்ஷர்தாம் கோவிலுக்கு மனைவியுடன் சென்று வழிபாடு நடத்தினார். அப்போது தம்மை பெருமைமிகு இந்து என அறிவித்துக் கொண்டார் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்.

பின்னர் ஜி 20 மாநாட்டில் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை ரிஷி சுனக் மேற்கொண்டார். இந்த பேச்சுவார்த்தைகளில் வங்கதேச பிரதமர் ஷே ஹசீனாவுடன் ரிஷி சுனக் அமர்ந்து பேசும் படம்தான் இப்போது கொண்டாடப்பட்டு வருகிறது.
தாம் சூரியனே அஸ்தமிக்காத சாம்ராஜ்யத்தின் பிரதமர் என்ற ஈகோ எதுவும் இல்லாமல் பெரியவரான ஷேக் ஹசீனா அமர்ந்திருந்த நாற்காலி அருகே தரையில் ஒரு காலில் மண்டியிட்டபடியே அன்யோன்யமாக ரிஷி சுனக் பேசும் அந்த காட்சிகள் அத்தனை பெருமிதத்தை உருவாக்கி கொண்டிருக்கிறது. தாம் ஒரு பிரம்மாண்ட ஏகாதிபத்திய அரசின் பிரதமர் பதவி என்ற சிந்தனை துளியும் இல்லாமல் ரிஷி சுனக் தம்மை வெளிப்படுத்திக் கொண்டதைத்தான் இன்று உலகம் முழுவதும் சமூக வலைதளங்களில் கொண்டாடி மகிழ்ந்து கொண்டிருக்கின்றன.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications