ஜி 20 மாநாடு: ஜனாதிபதி விருந்து.. எதிர்க்கட்சி தலைவர் கார்கேவுக்கு அழைப்பு இல்லை.. காரணம் என்ன?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஜி 20 மாநாட்டில் நாளை நடக்கும் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் மற்றும் மாநில அமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சி தலைவரான மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

உலகின் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நாடாக தனது நிலையை இந்தியா வலுப்படுத்தி வருகிறது. ஆண்டு தோறும் ஜி 20 மாநாட்டுக்கு ஒவ்வொரு நாடு தலைமை வகிக்கிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டில் இந்தியா ஜி 20 மாநாட்டுக்கு தலைமை வகிக்கிறது. டெல்லியில் ஜி 20 மாநாடு நடக்கிறது.

G20 Summit: Presidents Dinner, Leader of Opposition Mallikarjuna Kharge Not Invited

இதன்படி, செப்டம்பர் 9, 10 ( நாளை, நாளை மறுதினம்) நடைபெறவுள்ள ஜி20 உச்சி மாநாட்டின் முதன்மை அமர்வுக் கூட்டத்தில் கலந்து கொள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், னடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ், சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா உள்ளிட்ட பலர் இந்தியா வருகின்றனர்.

உலக நாடுகளின் தலைவர்கள் உள்பட ஜி20 தலைவர்கள், பிரதிநிதிகள் தங்குவதற்கு டெல்லியில் உள்ள சொகுசு ஹோட்டல்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் உலகத் தலைவர்களுக்கு சிறப்பான அனுபவத்தை வழங்கவும், இந்தியாவின் செழுமைமிக்க கலாசாரத்தை அவர்களுக்கு காட்டவும் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், நாளை ஜி 20 மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்களுக்கு ஜனாதிபதி இரவு உணவு விருந்து அளிக்கிறார். இந்த விருந்தில், பங்கேற்க மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் மற்றும் மாநில அமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மல்லிகார்ஜூன கார்கேவுக்கு இந்த விருந்துக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. மல்லிகார்ஜூன கார்கேவை பொறுத்தவரை எதிர்க்கட்சி தலைவர் என்பதால் அவருக்கு கேபினட் அந்தஸ்து உண்டு. அப்படி இருந்த போதிலும் அவருக்கு அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படவில்லை.

எதிர்க்கட்சிகள் யாருக்கும் அழைப்பு உடைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அமைச்சர்கள் மாநில முதல்வர்கள் மற்றும் மாநில அமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் டெல்லி முதல்வர் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உட்பட பீகார் முதல்வர் நிதிஷ்குமார் உள்ளிட்ட பல மாநில முதல்வர்களும் இந்த விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+