ஜி20 உச்சி மாநாடு: உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யாவுக்கு ஒரு கண்டனமும் இல்லையே.. ஏன்?
டெல்லி: ஜி 20 உச்சி மாநாடு இன்று டெல்லியில் தொடங்கி நடந்து வருகிறது. இந்த நிலையில், மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில், உக்ரைன் மீது போர் தொடுத்த விவகாரத்தில் ரஷ்யா மீது கண்டனம் தெரிவிக்கும் எந்த ஒரு தீர்மானமும் எடுத்துக்கொள்ளப்படவில்லை.
1990களில் மிகப் பெரிய நிதி நெருக்கடி ஏற்பட்ட நிலையில், அதைத் தொடர்ந்து 1999இல் உருவாக்கப்பட்டது தான் ஜி20. உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 85 சதவீதத்தையும், வர்த்தகத்தில் 75 சதவீதத்திற்கும் மேல் மற்றும் உலக மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கும் இந்த ஜி20 உறுப்பு நாடுகளில் இருந்தே வருகிறார்கள்.

சர்வதேச அளவில் பொருளாதார பிரச்சினைகளிலும் முடிவெடுக்க இதுவே முக்கிய பங்கு வகிக்கிறது. மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலத்தில் ஜி20 அமைப்பில் உறுப்பினராக இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த ஜி20 உச்சி மாநாட்டை நடத்துவது என்பது ஒவ்வொரு உறுப்பு நாட்டிற்கும் கொடுக்கப்படும் மரியாதையாகும்.
ஜி20 தலைமை பொறுப்பு என்பது சுழற்சி முறையில் ஒவ்வொரு நாட்டிற்கும் வழங்கப்படும். அதன்படி, கடந்தாண்டு இந்தோனேசியாவில் இந்த மாநாடு நடந்த நிலையில், நடப்பாண்டு இந்தியாவில் நடந்து வருகிறது. அடுத்தாண்டு பிரேசில் நாட்டிலும் அதற்கு அடுத்தாண்டு தென்னாப்பிரிக்காவிலும் நடக்க இருக்கிறது.
இந்த நிலையில், தலைநகர் டெல்லியில் இன்று 18வது ஜி20 உச்சி மாநாடு தொடங்கியது. இந்த மாநாட்டில் 19 நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். அமெரிக்க அதிபர் பைடன் தொடங்கி பல தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டுள்ளனர். இதேபோல், ஜி20 நாடுகளைத் தவிர வங்கதேச பிரதமர் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மன்னர் உட்பட ஒன்பது நாடுகளின் தலைவர்களும் இதில் விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர்.
ஜி20 மாநாடு தொடங்கி நடைபெற்ற நிலையில், பல்வேறு தீர்மானங்களும் இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. குறிப்பாக சந்திரயான் 3 திட்ட வெற்றிக்கு ஜி20 உறுப்பு நாடுகள் வாழ்த்து தெரிவித்தன. பொருளாதார வளர்ச்சிக்கான முடிவுகள் எடுக்கும் இடத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பாலின இடைவெளியை குறைத்து சமமான வாய்ப்புகளை வழங்கி பெண்களை ஊக்குவிக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதேபோல், அணு ஆயுதங்களை பயன்படுத்துவதையோ, அணு ஆயுத மிரட்டல்களையோ ஏற்க முடியாது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உலக நாடுகளில் நிலவும் பொருளாதார சிக்கல்களுக்கு தீர்வு காண்பதே இலக்கு. புவிசார் அரசியில் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் தளமாக ஜி20 அமைப்பு இல்லை என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஆனால், உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா மீது கண்டனம் தெரிவிக்கும் எந்த ஒரு தீர்மானமும் எடுத்துக் கொள்ளப்படவில்லை. எனினும் உணவு பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் இந்த போரின் காரணமாக தான் ஏற்பட்டுள்ளதை குறித்து எடுத்துக் காட்டப்பட்டது. இன்று நடைபெற்ற மாநாட்டில் போரினால் உலகம் முழுவதும் மக்கள் பாதிக்கப்படுவதாக தாக்கங்கள் ஏற்படுவதாகவும் கூறப்பட்டிருந்தது.
அதேபோல் கடந்த நவம்பர் 2022 பாலியில் நடைபெற்ற ஜி 20 மாநாட்டில் விவரம் குறித்து எழுப்பப்பட்ட பிரச்சனைகளையும் நினைவு கூறப்பட்டது. முன்னதாக இந்த மாநாட்டில் தொடக்க உரை ஆற்றிய பிரதமர் மோடி, "மாநாட்டின் கருப்பொருளான "ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்" குறித்து விளக்கம் அளித்தார்.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications