யார்ரா அந்த பையன்..நான்தான் அந்த பையன்! அடிகள் தான் எங்களை வலிமையாக்குகிறது! ஓபனாய் பேசிய கெளதம் அதானி
டெல்லி: பங்குச்சந்தை முறைகேடு தொடர்பான ஹிண்டன்பர்க் அறிக்கை, சோலார் மின்சார கொள்முதலுக்கு லஞ்சம் கொடுத்த குற்றச்சாட்டில் சிக்கியதால் கௌதம் அதானி நிறுவனங்களின் பங்குகள் வெகுவாக சரிந்தன. இந்த நிலையில் தங்கள் மீதான ஒவ்வொரு தாக்குதலும் தங்களை இன்னும் வலிமையாக மாற்றுகிறது என கௌதம் அதானி முதன்முறையாக தங்கள் நிறுவனங்களின் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து பேசி இருக்கிறார்.
உலக அளவில் பெரும் தொழிலதிபர்களில் ஒருவராக விளங்குகிறார் இந்தியாவைச் சேர்ந்த கௌதம் அதானி. இந்தியாவைப் பொறுத்தவரை அம்பானி குடும்பங்களின் ஆதிக்கத்தை தாண்டி உலக அளவில் மிகப் பெரும் தொழிலதிபர்களாக உருவெடுத்த கௌதம் அதானி முக்கியத்துவம் வாய்ந்தவர்.

கடந்த 10 ஆண்டுகளில் இவரது நிறுவனத்தின் வளர்ச்சி எண்ணிப் பார்க்க முடியாத அளவு இருக்கிறது. அதானி கிரீன் எனர்ஜி, அதானி டோட்டல் கேஸ், அதானி துறைமுகங்கள், விமான நிலையங்கள் என அவர் கால் வைக்காத துறைகளே கிடையாது எனும் அளவுக்கு தொழில் சாம்ராஜ்யம் விளங்குகிறது.
குறிப்பாக அதானி கிரீன் எனர்ஜி மூலம் சோலார் மின் உற்பத்தியில் அந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறது, இந்த நிலையில் சோலார் மின்சாரத்தை கொள்முதல் செய்வதற்காக தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்த அரசு அதிகாரிகளுக்கு சுமார் 2000 கோடி அளவுக்கு லஞ்சம் கொடுத்ததாக கௌதம் அதானி மற்றும் அவரது நிறுவனங்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. அமெரிக்கா ஃபெடரல் நீதிமன்றத்தின் இந்த குற்றச்சாட்டு காரணமாக உலக அளவில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் பல மாநிலங்கள் அதானியின் மின்சார ஒப்பந்தங்களை ரத்து செய்துள்ளன. இதை அடுத்து இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும், அதானியை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்கி வருகின்றன. இந்த குற்றச்சாட்டு அதானிக்கு எதிராக வரும் இரண்டாவது குற்றச்சாட்டு ஆகும். ஏற்கனவே பங்குமுறைகேட்டில் ஈடுபட்டதாக அதானியின் நிறுவனங்கள் மீது ஹிண்டன்பர்க் அறிக்கை குற்றச்சாட்டியது.
இதை அடுத்து அதானியின் நிறுவனங்களின் பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தது. தற்போதும் அதானி குழும பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்த நிலையில், முதன்முறையாக தங்கள் நிறுவனங்களின் மீதான குற்றச்சாட்டு குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார் கௌதம் அதானி. இது தொடர்பாக பேசி உள்ள அவர்,"அதானி குழும நிறுவனங்கள் உலகத்தரம் வாய்ந்த ஒழுங்குமுறை விதிகளுக்கு இணக்கமாக செயல்படுவோம் என உறுதி அளித்து இருக்கிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக அதானி கிரீன் எனர்ஜி விதிகளை மீறி செயல்பட்டதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. இந்த குற்றச்சாட்டுகளை நாங்கள் எதிர்கொண்டோம். இது போன்ற பிரச்சனைகளையும், சவால்களையும், குற்றச்சாட்டுகளையும் நாங்கள் எதிர்கொள்வது ஒன்றும் முதல் முறை கிடையாது. எங்கள் மீதான ஒவ்வொரு தாக்குதலும் எங்களை வலிமையாக்குகிறது. ஒவ்வொரு தடைக்கல்லும் எங்களது அதானி குடும்பம் மீண்டும் முன்னேறுவதற்கான படிக்கற்களாக மாறி உள்ளன.
தற்போதைய சூழலில் உண்மையை விட பொய் அதிகமாக பரவுகிறது. இந்த குற்றச்சாட்டுகளை நாங்கள் சட்டரீதியாக எதிர்கொள்ள அனைத்து நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கிறோம். உலகத்தரத்தில் ஒழுங்குமுறை விதிகளுக்கு இணைந்து நடப்போம் என்ற முழுமையான உறுதிபாட்டை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்துகிறேன்" என கூறி உள்ளார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications