உ.பி. மகா கும்பமேளா: ஆன்மீக நிகழ்வு மட்டுமல்ல..கற்றுத் தரும் பாடங்கள் ஏராளம்- கவுதம் அதானி பெருமிதம்
டெல்லி: உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா என்பது வெறும் பக்தர்களின் ஆன்மீக ஒன்று கூடல் மட்டுமல்ல.. நமக்கு இந்த கும்பமேளா பல்வேறு பாடங்களையும் கற்றுத் தருகிறது.. ஆன்மீக உள்கட்டமைப்பு என்பதிலும் பல கோடி யாத்ரீகர்களுக்கு சேவையாற்றுவதிலும் அதானி குழுமம் தம்மை இணைத்துக் கொள்வதாக அதன் தலைவர் கவுதம் அதானி தெரிவித்துள்ளார்.
அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி, Linkedin சமூக வலைதளப் பக்கத்தில் எழுதியுள்ளதாவது: கும்பமேளா ஒன்று கூடலை வேறு எந்த ஒரு ஒன்று கூடல் நிகழ்வுடனும் ஒப்பிட்டுவிட முடியாது. அதானி குழுமம் இந்த மகா கும்பமேளாவில் தம்மையும் இணைத்துக் கொண்டிருக்கிறது. துறைமுகங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்டவைகளை நாடு முழுவதும் நிர்மாணிக்கிற நமது அதானி குழுமம், "ஆன்மீக உள்கட்டமைப்பு" என்பதிலும் தம்மை இணைத்துக் கொள்கிறது.

ஹார்வார்ட் பிசினஸ் ஸ்கூல் போன்றவை கும்பமேளா ஒன்று கூடலை பிரம்மாண்டமானதாக பார்க்கின்றன. ஒரு இந்தியனாக எனக்குள் ஆழமான தாக்கத்தையும் இந்த ஒன்று கூடல் ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தை விட மிகப் பெரிய தற்காலிக நகரம், ஒன்று புனித நதிக்கரைகளில் அமைக்கப்பட்டு மகா கும்பமேளா ஒன்று கூடல் நடைபெறுகிறது. இத்தகைய ஒரு தற்காலிக நகரை உருவாக்குவதற்கு எந்த ஆலோசனைக் கூட்டங்கள், முதலீடுகள் என மிகப் பெரிய திட்டமிடல்கள் இல்லை.. பல நூற்றாண்டுகளாக நாம் இத்தகைய மகா கும்பமேளா ஒன்று கூடல்களை வெற்றிகரமாகவே நடத்தி வருகிறோம்.
கும்பமேளா என்பது எத்தனை கோடி மக்கள் ஒன்று கூடி புனித நீராடினார்கள் என்பதானது மட்டுமல்ல.. 20 கோடிக்கும் அதிகமான மக்கள் ஒரு இடத்தில் ஒன்று கூடுதல் என்பது மட்டுமே அல்ல இந்த மகா கும்பமேளா. இதனை 'ஆன்மீக பொருளாதாரம்" என்று அழைக்கிறேன். ஒரு நதி என்பது வெறும் நீரைக் கொண்டது மட்டுமல்ல.. நமது பாரம்பரிய பேரொளியைக் கொண்ட புனித நதியாகும்.
இத்தகைய கும்பமேளாவில் சேவையாற்றுவது மூலம் தலைமைத்துவத்தை நாம் வெளிப்படுத்துகிறோம். இத்தகைய கும்பமேளா நிகழ்வுகளில் சேவையாற்றுவது ஒரு வழிபாடாக, கடவுளுக்கு செய்கிற சேவையாக நாம் கருதுகிறோம்.
நமது கும்பமேளா ஒன்று கூடல்கள் சர்வதேச பொருளாதார பாடங்களையும் நமக்கு கற்றுத்தருகின்றன. இந்த கும்பமேளா நிகழ்வுகளில் சாதுக்கள் மட்டுமே பங்கேற்பதும் இல்லை. சாதுக்கள் முதல் கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் வரை, கிராம மக்கள் முதல் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வரை அனைவரையும் வரவேற்கிறது. இதனால்தான் நன்மையுடனான வளர்ச்சி என இதனை நாம் அழைக்கிறோம். இந்த கும்பமேளா நிகழ்வுகள் ஆன்மீக தொழில்நுட்பத்தையும் நமக்கு வெளிப்படுத்தி நிற்கிறது. கும்பமேளா என்பது ஒரு காட்சிப் பொருள் அல்ல.. நமக்கு ஆன்மீக வழிகாட்டுதல்களை வழங்குகிறது. நமது ஆன்மீக கலாசார வாழ்வியல் மீது நம்பிக்கையை உருவாக்கித் தருகிறது.
நமது அதானி குழுமங்களின் துறைமுகங்கள், சோலார் பண்ணைகளில் பயணிக்கின்ற போது கும்பமேளா நினைவுகள் எதிரொலிக்கும். நமது பாரம்பரிய பண்பாடு என்பது வாழ்வியல் முறைகளால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பதை உணர முடிகிறது. இத்தகைய கும்பமேளா நிகழ்வுகளை சிறப்பாக நடத்துகிற கட்டமைப்புகளை எத்தனை நூற்றாண்டுகளாக நாம் தொடர்ந்து பின்பற்றி வருகிறோம்.. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், காலநிலை மாற்றம் என பலவுமாக பேசுகிற தருணத்தில் கும்பமேளா நமக்கு சில பாடங்களையும் கற்றுத் தருகிறது. நமது திறன் மேம்பாடு, மனித நேயம், சேவைகள் மூலமான தலைமைத்துவம், ஆன்மாவை இழந்துவிடாத வளர்ச்சி என பல பாடங்களை இந்த கும்பமேளா ஒன்று கூடல் கற்றுத் தந்துள்ளது.
இந்தியா சர்வதேச அளவில் சூப்பர் பவர் நாடாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. கும்பமேளா என்பது ஒரு ஆன்மீக- மதம் சார்ந்த நிகழ்வு அல்லது ஒன்று கூடல் அல்ல. நமது பண்பாட்டை வெளிப்படுத்துகிற ஒன்று. இந்தியாவின் உண்மையான பலம் என்பது அதன் ஆன்மாவில்தான் இருக்கிறது. வளர்ச்சி என்பது பொருளாதாரம் சார்ந்தது மட்டும் அல்ல.. மனிதநேயத்தையும் சேவையையும் உள்ளடக்கியதும் கூட. இதுதான் கும்பமேளா நமக்கு கற்றுத் தருகிற பாடம்.
இந்தியாவின் வளர்ச்சி குறித்து நாம் அடுத்த முறை பேசும் போது, பிரம்மாண்ட துறைமுகங்கள், மரபுசாரா எரிசக்தி பூங்காக்கள் ஆகியவற்றை வெற்றிகரமாக நிர்மாணித்துவிட்டோம் என்பதுடன் இல்லாமல், கும்பமேளா போன்ற ஆன்மீக ஒன்றுகூடல்களை வெற்றிகரமாக நடத்தினோம்; கோடிக்கணக்கான யாத்ரீகர்களுக்கு சேவையாற்றினோம் என்பதையும் நாம் இணைத்துக் கொள்ள வேண்டும்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications