GDP 2020: சீனா மட்டுமே வளர்ச்சி... அனைத்து உலக நாடுகளிலும் சரிவு!!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உலகில் சீனாவைத் தவிர அனைத்து முன்னணி பொருளாதார நாடுகளும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பின்னடைவை சந்தித்துள்ளன. 1996ஆம் ஆண்டில் இருந்து மொத்த உள்நாட்டு உற்பத்தி குறித்த காலாண்டு அறிக்கை வெளியாகியுள்ளது. முதன் முறையாக இன்று வெளியான 2020-21ஆம் நிதியாண்டில் ஏப்ரல்-ஜூன் காலாண்டுக்கான நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி பரிதாபமாக 23.9% சரிந்துள்ளது.

ஆனால், அமெரிக்கா உள்பட உலக நாடுகளுக்கு சவால் விட்டு வரும் உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரத்தை கொண்டு இருக்கும் சீனாவின் பொருளாதாரம் இந்தக் காலகட்டத்தில் 3.2 சதவீதம் வளர்ச்சியை பெற்றுள்ளது. ஆனால், 2020ஆம் நிதியாண்டில் ஜனவரி - மார்ச் வரையிலான காலாண்டில் சீனாவின் பொருளாதாரம் 10 சதவீதமாக இருந்தது. இது இரண்டாவது ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 11.5என்ற அளவில் வளர்ச்சி கண்டுள்ளது.

சேவை துறை

சேவை துறை

உலகின் முக்கிய பொருளாதார நாடுகளில் ஒன்று பிரிட்டன். இந்த நாட்டில் 2020 ஏப்ரல்-ஜூன் காலாண்டில் பொருளாதாரம் 20.4 சதவீதமாக சரிந்துள்ளது. இந்த நாட்டின் சேவை துறைகள், கட்டிட துறைகள், தயாரிப்பு தொழிற்சாலைகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

கொரோனா

கொரோனா

2020 ஏப்ரல்-ஜூன் காலாண்டில் பிரான்ஸ் நாட்டின் பொருளாதாரம் 13.8 சதவீதத்தில் சரிவை சந்தித்துள்ளது. இதற்குக் காரணம் கொரோனா பொது முடக்கம் என்று கூறப்படுகிறது. இந்த நாட்டுடன் தொடர்பு உடைய மற்ற நாடுகளின் பொருளாதாரமும் பெரிய அளவில் பாதிப்படைந்துள்ளது.

பெரிய சரிவு

பெரிய சரிவு

இந்தக் கால கட்டத்தில் இத்தாலியின் பொருளாதாரம் 12.4 சதவீதம் என்ற அளவில் சுருங்கியுள்ளது. 1995ஆம் ஆண்டுக்குப் பின்னர் மிகவும் மோசமான சரிவு இது என்று அந்த நாடு அறிவித்துள்ளது. இந்த நாடு பெரிய அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தது. தொடர்ந்து நீண்ட நாட்கள் பொது முடக்கத்தில் இருந்தது. பொருளாதாரம் சரிவுக்கு இதுதான் காரணம் என்று கூறப்பட்டுள்ளது. 2020 முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் 5.4 சதவீத வளர்ச்சி குறைந்துள்ளது.

நுகர்வோர் தேவை

நுகர்வோர் தேவை

2020 ஏப்ரல்-ஜூன் காலாண்டில் கனடாவின் பொருளாதாரம் 12 சதவீதமாக சுருங்கியுள்ளது. நுகர்வோர் தேவை குறைந்தது, தொழில் மந்தம், முதலீடு குறைவு, கொரோனாவால் இறக்குமதி, ஏற்றுமதி பாதிப்பு ஆகிய காரணங்களால் ஜிடிபி குறைந்துள்ளது.

அரை நூற்றாண்டு

அரை நூற்றாண்டு

2020 ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ஜெர்மன் நாட்டின் பொருளாதாரம் 10.1 சதவீதமாக சுருங்கியுள்ளது. அரை நூற்றாண்டுகளுக்குப் பின்னர் இந்த நாட்டின் பொருளாதாரம் பெரிய அளவில் சரிந்து இருப்பதாக தெரிவித்துள்ளது.

ஜி 7 நாடுகள்

ஜி 7 நாடுகள்

2020 ஏப்ரல்-ஜூன் காலாண்டில் அமெரிக்காவின் பொருளாதாரம் 9.5 சதவீதமாக சரிந்துள்ளது. 1947 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இதுதான் மிகப் பெரிய சரிவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு முன்பு ஜி 7 நாடுகளிலேயே அமெரிக்காதான் அதிக வளர்ச்சியை பெற்று இருந்தது.

1980, 2008க்குப் பின்னர்

1980, 2008க்குப் பின்னர்

2020 ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ஜப்பான் பொருளாதாரம் 7.6 சதவீதமாக சரிந்துள்ளது. கொரோனா காரணமாக பொருளாதாரம் மிகப்பெரிய வீழ்ச்சியை கண்டுள்ளது. 1980, 2008 ஆகிய ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது பெரிய அளவில் சரிவை சந்தித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+