பாகிஸ்தானுக்கு நோ சொல்லி.. இந்தியாவுடன் கைகோர்த்த ஜெர்மனி! இனி நாமதான் கெத்து
டெல்லி: நீர்மூழ்கி கப்பல் தயாரிப்பில் இந்தியாவுக்கு புதிய டெக்னாலஜியை கொடுக்க ஜெர்மனி முன்வந்திருக்கிறது. இதற்கு முன்னர் பாகிஸ்தான் இந்த டெக்னாலஜியை கேட்டிருந்தது. ஆனால் ஜெர்மனி அந்நாட்டுக்கு கொடுக்கவில்லை. அந்த வகையில் இந்தியாவுக்கு தற்போது சிறப்பான வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாகிஸ்தானின் 'Agosta-class PNS Saad' எனும் நீர் மூழ்கி கப்பல் காணாமல் போய்விட்டது. வழக்கமாக நீர் மூழ்கி கப்பல்கள் 48 மணி நேரம் வரை நீருக்குள் இருக்கும். பின்னர் ஆக்ஸிஜன் தீர்ந்துபோய், மேலே வந்துவிடும். ஆனால் பாகிஸ்தானின் கப்பல் காணாமல் போய் 48 மணி நேரத்திற்கும் அதிகமாக ஆகிவிட்டது. இருந்தாலும் நீர்நிலையில் மேற்பகுதியில் அதை கண்டுபிடிக்க முடியவில்லை. இது இந்தியாவுக்கு பெரிய அச்சுறுத்தல்.

பாகிஸ்தான் எல்லையிலிருந்து குஜராத்துக்கு இந்த கப்பல் 3 நாட்களில் வந்துவிடும். அதேபோல மும்பையை ஒட்டிய கடற்பகுதிக்கு வெறும் 6 நாட்களில் வந்துவிடும். எனவே, நீர்மூழ்கி கப்பலை இந்தியா வலை வீசி தேடியது. இதற்காக சிறப்பு ரோந்து கப்பல்கள், மற்றும் விமானங்களையும் இந்தியா அனுப்பியிருந்தது. 21 நாட்கள் நீண்ட தேடுதலுக்கு பின்னர் மேற்கு பாகிஸ்தானில் உள்ள கடல் பரப்பில் அந்த கப்பல் கண்டுபிடிக்கப்பட்டது.
21 நாட்கள் கப்பல் நீருக்குள் இருந்தது எப்படி சாத்தியம் என்று கேள்வி எழலாம். கடற்படையும் இது குறித்து விசாரித்ததில் பல்வேறு தகவல்கள் வெளியாகின. அதாவது, காணமல் போன பாகிஸ்தான் நீர்மூழ்கி கப்பல் 'Agosta-class' வகையை சேர்ந்தது. இந்த வகை கப்பல்களை பிரான்ஸ் ராணுவம் கடந்த 1970களில் தயாரித்தது. இதன் சிறப்பம்சமே நீண்ட நாட்கள் கடலுக்குள் இருப்பதுதான். காரணம் இதில் air-independent propulsion (AIP) எனப்படும் தொழில்நுட்பம் பொருத்தப்பட்டிருக்கிறது.
அதாவது கப்பல் மேலே வரவில்லை என்றாலும் கூட, இது தானாக ஆக்ஸிஜனை உற்பத்தி செய்து உள்ளே இருக்கும் கடற்படை வீரர்களை காப்பாற்றும். 2-3 வாரங்களுக்கு தேவையான ஆக்ஸிஜனை இந்த தொழில்நுட்பத்தால் வழங்க முடியும்.
ஆனால் பாகிஸ்தான் சொந்தமாக இந்த தொழில்நுட்பம் கொண்ட நீர்மூழ்கி கப்பலை தயாரிக்க முடியாது. எப்படி தயாரிப்பது என்றும் தெரியாது. எனவே கடந்த 2020ம் ஆண்டு ஜெர்மனியிடம் இந்த தொழில்நுட்பத்தில் இயக்கும் நவீன நீர்மூழ்கி கப்பலை தயாரித்து கொடுக்க கேட்டிருந்தது. "நீங்க ஏற்கெனவே சீனாவுடன் இருக்கீங்க.. அதனால இதை தர முடியாது" என ஜெர்மனி கைவிரித்துவிட்டது.
இப்படி கைவிரித்த ஜெர்மனி, தற்போது இந்தியாவுக்கு இந்த அதிநவீன கப்பல்களை செய்து தர முன்வந்திருக்கிறது. அதாவது ஜெர்மனி கடற்படைக்கு தேவையான கப்பல்களை தயாரித்து கொடுக்கும் 'Thyssenkrupp Marine Systems (TKMS)' எனும் தனியார் நிறுவனம், இந்தியாவின் கப்பல் கட்டுமான பொதுத்துறை நிறுவமான 'மசாகன் கப்பல் கட்டும் நிறுவனத்துடன்' (Mazagon Dock Shipbuilders) ரூ.44,816 கோடிக்கு ஒப்பந்தம் போட்டிருக்கிறது.
இதன் மூலம் இந்தியாவுக்கு AIP வசதி கொண்ட அதிநவீன 6 கடற்படை நீர்மூழ்கி கப்பல்களை இந்நிறுவனம் தயாரித்து கொடுக்கும். கடந்த 44 ஆண்டுகளில் இந்தியா-ஜெர்மனி ஒன்று சேர்ந்து கப்பல்களை தயாரிக்கும் பணியில் ஈடுபடுவது இதுவே முதல்முறையாகும்.
இப்படி தயாரிக்கப்படும் கப்பல்களில் லித்தியம்-ஐயன் பேட்டரிகள் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தற்போது பாகிஸ்தானிடம் உள்ள கப்பல்களில் டீசல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. டீசலுடன், லித்தியம் பேட்டரிகளை ஒப்பிடும்போது பேட்டரிகளே அதிகவேக செயல் திறனை கொடுக்கும். எனவே இந்தியாவுக்கு கிடைக்கும் கப்பல்கள் அதிவேகம் கொண்டதாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications