பழிவாங்காத மோடிக்கு “தேங்க்ஸ்”.. எங்கள் பின் பாஜகவா? சின்னபுள்ளத்தனமா இருக்கே - குலாம் நபி ஆசாத்
டெல்லி: எதிர்க்கட்சித் தலைவராக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டு வந்த பல்வேறு மசோதாக்களை தான் எதிர்த்து அதனால் சில மசோதாக்கள் நிறைவேறாதபோதிலும் பிரதமர் நரேந்திர மோடி தன்னை பழிவாங்காமல் அரசியல்வாதியாக நடந்துகொண்டார் என்று கூறி அவருக்கு நன்றி தெரிவித்து இருக்கிறார் ஜனநாயக ஆசாத் கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தவர் குலாம் நபி ஆசாத். காங்கிரஸ் கட்சியில் காந்தி குடும்பத்தினருக்கு அடுத்து அதிக செல்வாக்கு மிகுந்த நபராக இருந்து வந்த அவர் அக்கட்சியில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்து உள்ளார்.
ஆனால், காங்கிரஸ் கட்சியின் தொடர் தேர்தல் தோல்விகளுக்கு காந்தி குடும்பமே காரணம் என்று கூறி போர்க்கொடி தூக்கினார் குலாம் நபி ஆசாத். அவரை தொடர்ந்து பல மூத்த தலைவர்கள் காங்கிரஸ் தலைமைக்கு எதிராக அணிவகுத்தனர்.

குலாம் நபி ஆசாத்
இப்படி காங்கிரஸ் தலைமைக்கு எதிராக கட்சிக்கு உள்ளேயே செயல்பட்ட அதிருப்தி குழுவான ஜி 23 க்கு குலாம் நபி ஆசாதே தலைமை தாங்கினார். அதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சியில் இருந்து கடந்த ஆண்டு குலாம் நபி ஆசாத் விலகி, "ஜனநாயக ஆசாத் கட்சி" என்ற பெயரில் ஜம்மு காஷ்மீரில் புதிய கட்சி ஒன்றை தொடங்கினார்.

பிரதமர் மோடிக்கு பாராட்டு
இந்த நிலையில் குலாம் நபி ஆசாத் தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி ஒன்றை அளித்து உள்ளார். அதில் பேசிய அவர் பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டி நன்றி தெரிவித்து இருப்பதுடன் காங்கிரஸ் தலைமைக்கு எதிராக இருந்த ஜி 23 தலைவர்கள் பாஜக ஆதரவாளர்களாக மாறி இருப்பதாக வரும் குற்றச்சாட்டுக்களுக்கு விளக்கம் கொடுத்து உள்ளார்.

நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு
அவர் பேசுகையில், "பிரதமர் நரேந்திர மோடிக்கு நான் நன்றி சொல்கிறேன். ஏனெனில் ஜம்மு காஷ்மீருக்கான 370 வது சிறப்பு சட்டப் பிரிவு ரத்து, குடியிரிமை திருத்த சட்டம், ஹிஜாப் போன்ற பல்வேறு விவகாரங்களில் நான் ஒரு எதிர்க்கட்சித் தலைவராக அவற்றை எல்லாம் எதிர்த்து குரல் எழுப்பி இருக்கிறேன். அதன் காரணமாக சில மசோதாக்கள் நிறைவேறாமல் தோல்வியும் அடைந்தன.

பழிவாங்காத மோடி
ஆனால், பிரதமர் மோடி என்னை பழிவாங்கவில்லை. அவர் ஒரு அரசியல்வாதியாகவே நடந்துகொண்டார். அந்த பெருமை அவருக்கு உள்ளது. காங்கிரஸ் தலைமைக்கு எதிராக செயல்பட்ட ஜி 23 குழுவின் தலைவர்களில் நான் மட்டும்தான் புதிய கட்சி ஒன்றை தொடங்கி இருக்கிறேன். மற்றவர்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சியில்தான் இன்னும் அங்கம் வகித்து வருகிறார்கள்.

சிறுபிள்ளைத்தனம்
ஜி 23 தலைவர்களின் பாரதிய ஜனதா கட்சி இருப்பதாக சொல்வது முட்டாள்தனம். அவர்கள் பின்னால் பாஜக இருக்கிறது என்றால் ஏன் அவர்கள் எல்லாம் காங்கிரஸ் கட்சியால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆக்கப்படுகிறார்கள்? இவை எல்லாமே சிறுபிள்ளைத்தனமான குற்றச்சாட்டு." என்றார். குலாம் நபி ஆசாத் நாடாளுமன்ற உறுப்பினராக ஓய்வுபெறும்போது பிரதமர் நரேந்திர மோடி அவரை பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
-
“காங்கிரஸின் அணுகுமுறை.. ஒட்டுமொத்த கூட்டணியின் வெற்றியை சிதைக்கிறது” - திருமாவளவன் அதிருப்தி! -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
ஆதவ் அர்ஜூனா போட்ட குண்டு.. தூக்கி அடிக்கப்பட்ட காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் செல்வம் -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டி! திமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை சீட்? லிஸ்ட்! -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
"உங்களுக்கு 3 நாள் தான் டைம்.. உடனே காலி பண்ணுங்க.." காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நோட்டீஸ் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications