தேர்தல் முடிவுக்குள் காங்கிரஸ் ட்விஸ்ட்.. கிரிஷ் சோடங்கர் பிடிவாதம்.. மீண்டும் மீண்டுமா
டெல்லி: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு 23 ஆம் தேதி நடைபெற்றது. எஸ்ஐஆர் நடவடிக்கையால் வரலாறு காணாத வாக்கு சதவீதம் பதிவாகியுள்ளது. மே 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படவுள்ளன. தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்ற முடிவில் இறங்கியது. திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி தவெகவுடன் கூட்டணியில் இணையவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் சிதம்பரம் உள்ளிட்ட மூத்த தலைவர்களின் முயற்சியால் திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியானது.
தேர்தல் முடிவுகள் வெளியாவதற்குள் காங்கிரஸ் மீண்டும் மலையேற தொடங்கியுள்ளது. தேர்தல் முடிவை பொறுத்து முக்கிய முடிவை எடுப்போம். தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்துடன் தான் இருப்போம். இனி நடுநிலை வகிக்க மாட்டோம் என்று கிரிஷ் சோடங்கர் சொல்லியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இனி நடுநிலை கிடையாது
காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "தமிழகத்தில் இனி காங்கிரஸ் கட்சி ஆட்சி, அதிகாரம் அல்லது எதிர்க்கட்சி அந்தஸ்தில் தான் இருக்கும். இனி அதிகாரமற்ற நிலையில் இருக்க மாட்டோம். நடுநிலையாக அங்கம் வகிக்க மாட்டோம். மே 4 வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு கட்சியின் நிர்வாக அமைப்புகள் மாற்றியமைக்கப்படும்.
அதிமுக வலுவாக உள்ள இடங்களில் எல்லாம் அந்தக் கட்சியை எதிர்த்து காங்கிரஸ் போட்டியிட்டுள்ளது. ஏற்கனவே வென்ற இடங்களை தக்க வைப்பதற்கும், புதிய இடங்களை கைப்பற்றுவதற்கும் காங்கிரஸ் கடுமையாக உழைத்துள்ளது. தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி வென்று மு.க. ஸ்டாலின் மீண்டும் முதல்வராவது உறுதி.
காங்கிரஸ் முக்கிய முடிவு
பாஜக குறுக்கு வழியில் நுழைவதை தடுப்பதற்காகவே இந்த தேர்தலில் பல கட்சிகள் ஓரணியில் இணைந்துள்ளனர். தற்போது கட்சிக்கு புத்துயிர் கொடுப்பதற்காக களத்தில் பல்வேறு நடவடிக்கைகளில் இறங்க போகிறோம். கிராம அளவிலான கமிட்டி, பூத் கமிட்டி போன்ற கட்டமைப்புகளை பலப்படுத்தும் பணிகளை தொடங்கிவிட்டோம்.
வட்டம், கிளை அளவிலான தலைவர்களை ஒருங்கிணைத்து உள்ளாட்சி தேர்தலில் வலுவான போட்டியை கொடுக்க திட்டமிட்டுள்ளோம். தேர்தல் முடிவுக்காக காத்திருக்கிறோம். தேர்தல் முடிவுக்கு பிறகு எங்கள் உரிமைகளை கேட்டு பெறுவோம். எங்கள் கோரிக்கைகள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறோம். ஆட்சியில் பங்கு அல்லது எதிர்கட்சி என்று முடிவு செய்தால் தான் கட்சியை வளர்த்த முடியும்" என்றார்.
-
“மின்வாரிய பதவி உயர்வு விவகாரத்தில் பொய்.. தவெக அரசின் பித்தலாட்டம்”.. பாய்ந்து வந்த திமுக! -
வைகோ வருத்தப்பட போறாரு.. நிர்வாகிகளை தட்டித் தூக்கும் திமுக! ஆர்டர் போட்ட ஸ்டாலின்! துரை தான் பாவம்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல! -
திராவிட நடுக்கம்! அண்ணாமலையின் வலையில் விழும் திமுக, அதிமுக புள்ளிகள்.. களமிறங்கும் மாஜி IAS, IPS! -
வெளிச்சம் டிவி என்னுடையது! விசிகவுக்கும் சேனலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை! பனையூர் பாபு பரபரப்பு -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
திருவள்ளுவருக்கு காவி சாயமா.. கருப்பு சட்டையுடன் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற வைகோ அதிரடி கைது -
விசிகவில் இருந்து சங்கத்தமிழன் 3 மாதங்களுக்கு சஸ்பெண்ட்.. திருமாவளவன் அதிரடி ஆக்ஷன்! -
ஒரு மேயர் ஜெயித்தாலும் ஒருபக்க மீசையை எடுக்கிறேன்.. தவெகவிற்கு சவால் விட்ட திமுகவின் ஆர்எஸ் பாரதி -
Sengottaiyan: அதிமுக அவ்வளவு தான் முடிஞ்சுது.. செங்கோட்டையன் டைமிங் பன்ச்












Click it and Unblock the Notifications