உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 3 கோடியை தொடுகிறது- உயிரிழப்புகள் 10 லட்சத்தை எட்டுகிறது
டெல்லி: உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 கோடியை நெருங்குகிறது. அதேபோல் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தொடும் நிலையில் உள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,91,75,454. கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 9,27,986. கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,10,20,687.

உலக நாடுகளில் அமெரிக்காவில் ஒரேநாளில் மொத்தம் 31,857 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் அங்கு மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 67,08,458.
2-வது இடத்தில் உள்ள இந்தியாவில் ஒரே நாளில் 93,215 பேருக்கு கொரோனா உறுதியானது. இந்தியாவின் மொத்த கொரோனா பாதிப்பு 50 லட்சத்தை தொடும் நிலையில் உள்ளது. அதாவது இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 48,45,003.
இந்தியாவுக்கு அடுத்ததாக உள்ள பிரேசிலில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 43,30,455. கொரோனா மரணங்களில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் மொத்தம் 1,98,520 பேர் கொரோனாவால் மாண்டு போயுள்ளனர்.

2-வது இடத்தில் உள்ள பிரேசிலில் 1,31,663 பேரும் இந்தியாவில் இதுவரை 79,754 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவுக்கு அடுத்ததாக மெக்சிகோவில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 70,604 ஆக உள்ளது.
உலக நாடுகளில் கொரோனாவால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 2,10,20,687. அமெரிக்காவில் 39,74,716 பேரும் இந்தியாவில் 37,77,044 பேரும் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். பிரேசிலில் 35,73,958 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications