எதாவது பல்கலை.க்கு சென்று மாணவர்களை சந்தியுங்கள்.. தைரியம் இருக்கிறதா? மோடிக்கு ராகுல் சவால்!
உங்களுக்கு தைரியம் இருந்தால் ஏதாவது ஒரு பல்கலைக்கு சென்று அங்கு இருக்கும் மாணவர்களை சந்தியுங்கள் என்று பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி சவால் விடுத்துள்ளார்.
டெல்லி: உங்களுக்கு தைரியம் இருந்தால் ஏதாவது ஒரு பல்கலைக்கு சென்று அங்கு இருக்கும் மாணவர்களை சந்தியுங்கள் என்று பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி சவால் விடுத்துள்ளார்.
காங்கிரஸ் கமிட்டியின் தலைமையில் டெல்லியில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடந்தது. மொத்தம் 20 கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். குடியுரிமை சட்ட திருத்தம், என்ஆர்சி, ஜேஎன்யூ மாணவர்கள் தாக்கப்பட்டது இதில் ஆலோசனை செய்தனர்.

இந்த ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி பிரதமர் மோடி குறித்து பேசினார். அதில், பிரதமர் மோடிக்கு தைரியம் இருந்தால் ஏதாவது ஒரு பல்கலைக்கு சென்று அங்கு இருக்கும் மாணவர்களை சந்திக்கட்டும். அங்கிருக்கும் மாணவர்கள் உடன் அவர் பேசட்டும்.
இளைஞர்கள் வேலையின்றி தவிர்க்கிறார்கள். மாணவர்கள் தாக்கப்படுகிறார்கள். பொருளாதாரம் நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. ஆனால் இதை பற்றி எல்லாம் பிரதமர் மோடி கொஞ்சம் கூட கண்டுகொள்ளவில்லை. இளைஞர்களின் குரலை மத்திய அரசு மதிக்கவில்லை.
இவர்களுக்கு எல்லாம் மோடி பதில் சொல்ல வேண்டும். அவர் போய் மாணவர்களை சந்தித்து பேசட்டும்.இந்தியாவின் இந்த நிலைக்கு அவர்கள் பதில் சொல்லட்டும், என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
திமுகவின் கோட்டையை சிதறடித்த தவெக.. சென்னை அதிமுக நிர்வாகிகளை தூக்கும் அறிவாலயம்.. பின்னணி! -
சீட்டைக் கலைத்துப் போடும் ஸ்டாலின்! ஆட்டத்தை மாற்றும் அறிவாலயம்! டோட்டலாய் மாறுதே..ரெடியாகும் தலைகள் -
மாட்டிவிட்ட மகளிர் உரிமைத் தொகை..பெண்களின் ஓட்டை கோட்டைவிட்ட திமுக! ஆய்வுக் குழுவின் அதிர்ச்சி தகவல் -
ஸ்டாலின் வெள்ளந்தியாக இருந்து விட்டார்.. காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் குறித்து திமுக நிர்வாகி பதிவு -
மீண்டும் மீண்டும் அதே தவறு.. கோட்டை விடும் ஸ்டாலின், உதயநிதி.. குமுறும் திமுகவினர் -
ப. சிதம்பரம் அகில இந்திய காங்கிரஸ் தலைவராகிறாரா? டெல்லி ட்விஸ்ட்.. அக்டோபர் முன்பே மாற்றம்? -
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
காங்கிரஸுடன் மொத்தமாக ஐக்கியமாகும் திரிணாமுல்.. உட்கட்சி பூசலை சமாளிக்க மம்தா அதிரடி? என்ன நடக்கிறது -
இந்தியா கூட்டணியில் இருந்து திமுக விலகுவதாக மு.க ஸ்டாலின் என்னிடம் கூறவில்லை - காங்கிரஸ் ப.சிதம்பரம் -
90 நிமிடங்கள் நடந்த மீட்டிங்.. ராகுல் தலைமையை ஏற்கும் மம்தா? கச்சிதமாக காய் நகர்த்தும் காங்கிரஸ் -
இனி திரிணாமுல் காங்கிரஸ் கிடையாது? காங்கிரசுடன் இணைக்கும் மம்தா? 1998ல் பிரிந்தது ஏன்? பின்னணி












Click it and Unblock the Notifications