டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கோவிலில் சாமி தரிசனம்.. குற்றம் கண்டுபிடித்த பாஜக.. கெஜ்ரிவால் பதிலடி

Google Oneindia Tamil News

Recommended Video

    செருப்பைக் கழட்டிய கைகளைக் கழுவாமல் கடவுளுக்கு பூஜை செய்த போலி இந்து கெஜ்ரிவால் - MP மனோஜ் திவாரி ட்வீட் - வீடியோ

    டெல்லி: டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ததை போலி என்று விமர்சனம் செய்துள்ளார், டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி. கடவுள் பாஜகவையும் ஆசிர்வதிக்கட்டும் என்று பதிலடி கொடுத்துள்ளார் கெஜ்ரிவால்.

    டெல்லி சட்டசபைக்கு இன்று தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், சில தினங்கள் முன்பாக டெல்லியுள்ள, அனுமார் கோவில் ஒன்றுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார் கெஜ்ரிவால். அவர் செருப்பை கையால் கழற்றிவிட்டு அந்த கையை கழுவாமலே கோவிலுக்குள் சென்று சாமி சிலைக்கு பூ தூவினார். இந்த வீடியோவை ஷேர் செய்த மனோஜ் திவாரி, கெஜ்ரிவால் ஒரு போலி பக்தர் என்பதற்கு இந்த வீடியோவே ஒரு சாட்சி என கூறியிருந்தார்.

    God bless everyone, even people from the BJP says Arvind Kejriwal

    டெல்லியில், சிஏஏ எதிர்ப்பு போராட்டங்கள் தீவிரமாக நடக்கின்றன. அப்படி போராடுவோர், இந்துக்களுக்கு எதிரானவர்கள் என்பது போல பாஜக பிரச்சாரம் செய்து வருகிறது. இந்த நிலையில்தான், கெஜ்ரிவால் இந்து கோவிலுக்கு சென்று, இந்து ஓட்டுகள் முழுக்க பாஜகவிற்கே செல்ல கூடாது என தடுக்க முயற்சி செய்கிறார் என பாஜ கோபப்படுகிறது. அதனால்தான், போலி பக்தர் என திவாரி விமர்சனம் செய்திருந்தார்.

    இந்த நிலையில், கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள ட்வீட்டில், என்ன மாதிரி அரசியல் இது? கடவுள் எல்லோருக்கும் சொந்தமானவர். கடவுள் அனைவரையும் ஆசிர்வதிப்பார். பாஜகவை சேர்ந்தவர்களுக்கும் ஆசீர்வதிப்பார். இவ்வாறு டுவிட்டரில் கூறியுள்ளார்.

    டெல்லியில் மீண்டும் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்கும்: கெஜ்ரிவால் நம்பிக்கை டெல்லியில் மீண்டும் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்கும்: கெஜ்ரிவால் நம்பிக்கை

    English summary
    "What kind of politics is this?" he asked. "God belongs to everyone. God bless everyone, even people from the BJP" says Arvind Kejriwal.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X