உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மாளிகை முன் படமாக்கப்பட்ட கோல்டன் குளோப் விருது வென்ற நாட்டு நாட்டு பாடல்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உக்ரைன் மீதான ரஷ்யாவின் யுத்தம் தொடங்குவதற்கு சில மாதங்களுக்கு முன்னதாக அதிபர் ஜெலன்ஸ்கி மாளிகை முன்பு படமாக்கப்பட்டதுதான் தற்போது கோல்டன் குளோப் விருது வென்றிருக்கும் நாட்டு நாட்டு பாடல்.

ஆஸ்கர் விருதைப் போல கொண்டாடப்படுவதுதான் கோல்டன் குளோப் விருது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோல்டன் குளோப் விருது வழங்கும் விழா நடைபெற்றது.

Golden Globe-winning RRR Naatu Naatu Song shot at Ukranian President residence

கோல்டன் குளோப் விருதுகள் தொடர்பான பரிந்துரைகள் பட்டியலில் ஆங்கில மொழி அல்லாத படங்கள் பிரிவில் ஆர்ஆர்ஆர் படம் இடம்பெற்றது. அதேபோல் பாடல் பிரிவில் நாட்டு நாட்டு பாடல் தகுதி பெற்றிருந்தது. தற்போது நாட்டு நாட்டு பாடல் கோல்டன் குளோப் விருதைப் பெற்றுள்ளது.

நாட்டு நாட்டு பாடல், கோல்டன் குளோப் விருது பெற்றதை இந்தியா கொண்டாடி மகிழ்கிறது. பிரதமர் மோடி தமது ட்விட்டர் பக்கத்தில், மிகச்சிறப்பான சாதனை! எம் எம் கீரவாணி, பிரேம் ரக்ஷித், கால பைரவா, சந்திரபோஸ், ராகுல் சிப்லிகுஞ்ச் ஆகியோருக்கு பாராட்டுக்கள். எஸ் எஸ் ராஜமௌலி, ஜூனியர் என் டி ஆர், ராம்சரண் மற்றும் ஆர்ஆர்ஆர் திரைப்பட அனைவருக்கும் நான் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த மதிப்புமிக்க கௌரவம் ஒவ்வொரு இந்தியரையும் பெருமையடைய செய்கிறது என பாராட்டு தெரிவித்துள்ளார்.

Golden Globe-winning RRR Naatu Naatu Song shot at Ukranian President residence

கோல்டன் குளோப் விருது வென்றிருக்கும் நாட்டு நாட்டு பாடல், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மாளிகை முன்பாக படமாக்கப்பட்டது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் யுத்தத்துக்கு முன்னர் இந்தப் பாடல் அங்கு படமாக்கப்பட்டது. உக்ரைன் மீதான யுத்த காலத்தில் இது தொடர்பான பயண படங்களை இயக்குநர் ராஜமவுலி, சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தார்.

கோல்டன் குளோப் விருது வழங்கும் நிகழ்ச்சியில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உரையாற்றினார். அவர் தமது உரையின் போது 3-வது உலகப் போர் நிச்சயம் வராது; ரஷ்யாவின் யுத்தத்தை நாங்கள் முறியடிப்போம் என நம்பிக்கை தெரிவித்தார். மேலும் முந்தைய உலகப் போர்களின் போது பல லட்சம் பேர் செத்து மடிந்ததையும் ஜெலன்ஸ்கி சுட்டிக்காட்டினார். உக்ரைனின் சுதந்திரத்துக்கான யுத்தத்துக்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும் என்றும் ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்தார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ஒரு தொலைக்காட்சி நடிகர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+