Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாதம் 50 ஆயிரம் வருமானம்.. மத்திய அரசு கொண்டு வரும் புதிய ரேஷன் கடை திட்டம்! எப்படி இருக்கும்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய அரசு புதிதாக தனியார் ரேஷன் கடை திட்டத்தை கொண்டுவர விரும்புகிறது. நாட்டில் உள்ள 40,000 நியாய விலைக் கடை (FPS) டீலர்கள் மற்ற சேவைகளை வழங்கி ரூ. 50,000 வருமானம் ஈட்டுவதால் இந்த திட்டதை தீவிரப்படுத்த மத்திய அரசு விரும்புகிறது. ஒரு மாவட்டத்திற்கு 75 கடைகள் என்ற அடிப்படையில் தனியார் ரேஷன் கடைகள் வரப்போகிறது

நாடு முழுவதும் 4 கோடியே 99 லட்சம் ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. இங்கு பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் அரிசி, கோதுமை, சீனி, பருப்பு, மண்ணெண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்கள் குறைந்த விலைக்கு வழங்கப்படுகின்றன. தமிழ்நாடு உள்பட சில மாநிலங்களில் அரிசி மட்டும் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் 35 ஆயிரத்து 323 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகள் வாயிலாக பொது விநியோகத் திட்டத்தின்கீழ், அரிசி, சீனி , கோதுமை, மண்ணெண்ணெய், பாமாயில், துவரம்பருப்பு உள்ளிட்டவை குறைந்த விலையில் வழங்கப்படுகின்றன. இதுதவிர சோப்பு முதுல் உப்பு வரை பல பொருட்கள் நியாயமான விலையில் வழங்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 2 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் இதன் மூலம் பயன்பெற்று வருகிறார்கள்.

75 கடைகள்

75 கடைகள்

தற்போது உள்ள ரேஷன் கடைகளில் அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களே பயன்பெற்று வருகிறார்கள். அதேநேரம் வெளிமாநிலத்தவர், புலம் பெயர்ந்தவர்கள் பயன்பெறும் வகையில், 'ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு, ஒரே ரேஷன் திட்டம்' என்ற திட்டத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. அந்த திட்டத்தின்படி எங்கே சென்றாலும், அந்தந்த மாநில அரசின் ரேஷன் கடைகளில் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. அந்த திட்டம் நடைமுறைக்கும் வந்துவிட்டது. இந்நிலையில் அந்த திட்டத்தின் நீட்சியாக தனியார் ரேஷன் கடைகளை திறக்க மத்திய அரசு முன்வந்துள்ளது. ஒரு மாவட்டத்திற்கு 75 என்ற அடிப்படையில் தனியாரால் நியாய விலைக்கடைகள் திறக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஆய்வுகள்

ஆய்வுகள்

இது குறித்து மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. "ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தை பரவலாக்கம் செய்யும் வகையில் பொதுவிநியோகத் திட்டத்தில் தனியார் பங்களிப்புக்கு வாய்ப்பளிக்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இது டெல்லி ஐஐடி மற்றும் உலக உணவு திட்டம் ஆகியவற்றுடன் இணைந்து விரிவான ஆய்வுகளை நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டது.

எப்படி இருக்கும்

எப்படி இருக்கும்

இதன் அடிப்படையில் ரேஷன் கடை திட்டத்தில் மாற்றங்களை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இந்தத் திட்டத்தின்கீழ் நியாய விலை கடை ( fair price shop ) என்ற பெயரில் டீலர்கள் நாடு முழுவதும் நியமனம் செய்யப்பட உள்ளனர். இந்தியாவில் உள்ள மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தங்கள் எல்லையில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 75 fair price shop கடைகளை திறக்கலாம்.

வெளிச்சந்தை விலை இல்லை

வெளிச்சந்தை விலை இல்லை

இந்த தனியார் நியாய விலைக் கடைகளில் அனைத்து வகையான மளிகைப்பொருட்கள் கிடைக்க வேண்டும். அத்துடன் பொதுமக்கள் அன்றாட வாழ்க்கைக்கு பயன்படுத்தும் அனைத்து விதமான உப பொருள்கள் விற்பனை செய்யப்பட வேண்டும். ஆனால், வெளிச்சந்தை விலைக்கு விற்பனை செய்யப்பட மாட்டாது.அரசின் நியாய விலைக்கடை விலையில் மட்டுமே பொருட்கள் விற்பனை செய்ய அனுமதிக்கப்படும்.

எப்படி வாங்குவது

எப்படி வாங்குவது

அதேநேரம் இந்த தனியார் ரேஷன் கடைக்கும், அந்தந்த மாநிலஅரசுகள் நடத்தும் பொது விநியோகத் திட்ட ரேஷன் கடைகளுக்கு எந்த சம்பந்தம் இல்லை. பொது விநியோகத் திட்டத்தில் வழங்கப்படும் எந்தவிதமான இலவசப் பொருளும் இந்த தனியார் ரேஷன் கடையில் வழங்கப்படாது. அதே நேரம் தனியார் ரேஷன் கடையில் பொருள் வாங்க சென்றாலும் ரேஷன் அட்டை எடுத்துச்சென்றதால் மட்டுமே பொருளை பெற முடியும்.

தனியார் டீலர்கள்

தனியார் டீலர்கள்

மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் தங்களது மாவட்டங்களில் 75 கடைகள் திறக்கத் தேவையான இட வசதிகளை செய்து தர வேண்டும். தனியார் டீலர் என்ற அடிப்படையில் அமைக்கப்படும் ரேஷன் கடைகளில் பொதுமக்கள் காத்திருப்பதற்கான அறைகள், சிசிடிவி கேமரா வசதிகள், டாய்லெட் வசதி, குடிநீர் வசதி, பாதுகாப்பு அம்சங்கள் இருக்க வேண்டும்.ரேஷன் திட்டத்தை பெரும் முன்னேற்ற திட்டமாகக் கொண்டு செல்ல பொதுமக்களின் பங்களிப்பும் அவசியம் என்பதால் இந்த தனியார் ரேஷன் கடை திட்டம் கொண்டு வரப்படுகிறது. இந்த தனியார் ரேஷன் கடை உரிமையாளர்கள் 'fair price shop dealer' என்ற பெயரில் அழைக்கப்படுவார்கள். இந்தத் தொழில் மூலம் அவர்கள் மாதம் ரூபாய் 50,000 வரை பொருளீட்ட முடியும்" இவ்வாறு மத்திய அரசின் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஏற்கனவே 40 ஆயிரம் கடைகள் நாடு முழுவதும் உள்ளதாகவும், இந்த திட்டத்தினை விரிவு படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசு விரும்புகிறது. இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும் போது ஒவ்வொரு மாவட்டத்திலும் இதற்கான டீசலர்ஷிப்பை இளைஞர்கள் எடுத்து மாதம் 50ஆயிரம் வருமானம் ஈட்டலாம் என்று கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+