குட்நியூஸ்.. சமையல் எண்ணெய் விலை குறைகிறது.. வரியை குறைத்தது மத்திய அரசு
டெல்லி: கடுமையாக உயர்ந்து வரும் சமையல் எண்ணெய் விலையை குறைக்கும் நோக்குடன் மத்திய அரசு இறக்குமதி வரியை குறைத்துள்ளது இதன் காரணமாக பாமாயில் விலை கணிசமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக சமையல் எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு மற்றும் ஊரடங்கு காரணமாக வேலையை இழந்து வருவாயை இழந்து தவித்து வருகிறார்கள் மக்கள்.
அவர்களுக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சிலிண்டர் விலை உயர்வு மற்றும் சமையல் எண்ணெய் விலை உயர்வு பெரும் சுமையாக மாறி வருகிறது.

வரி அதிகம்
இந்தியாவில் பயன்படுத்தப்படும் சமையல் எண்ணெய்களில் மூன்றில் இரண்டு பங்கு வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படுகிறது. இவற்றுக்கு மத்திய அரசு அளவுக்கு அதிகமாக இறக்குமதி வரி விதிப்பதால் உள்நாட்டில் இவற்றின் விலைகள் உயர்கின்றன. இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய்களுக்கான வரியை மத்திய அரசு நேற்று அதிரடியாக குறைத்துள்ளது.

சோயா பீன்
இதன்படி பாமாயில் மீதான இறக்குமதி வரியை டன்னுக்கு ரூ.8288 வரை குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல் சோயா பீன் எண்ணெய் மீதான இறக்குமதி வரை ஒரு டன்னுக்கு ரூ.2758 வரை குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம் உள்நாட்டில் சமையல் எண்ணெய்களின் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எவ்வளவு உயர்வு
இதனிடையே தமிழகத்தில் கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்த எண்ணெய் விலை மற்றும் 2021 ஜூனில் விற்பனை செய்யப்படும் எண்ணெய் விலைகளை இப்போது பார்ப்போம். கடலை எண்ணெய் விலை கடந்த ஆண்டு இதே மாதத்தில் 179 ரூபாய்க்கு (ஒரு லிட்டர்) விற்பனையானது. ஆனால் இப்போது அதன் விலை 9 சதவீதம் அளவிற்கு உயர்ந்து 196 ரூபாய் ஆக உள்ளது. கடுகு எண்ணெய் விலை கடந்த ஆண்டு 132 ரூபாயாக இருந்தது. இந்த ஆண்டு 177 ரூபாய் ஆக அதிகரித்துள்ளது. அதாவது 34 சதவீதம் அளவிற்கு கடுகு எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.

வனஸ்பதி எண்ணெய்
வனஸ்பதி எண்ணெய் விலை 106ரூபாயில் இருந்து 141 ரூபாயாக உயர்ந்துள்ளது. சோயா எண்ணெய் 117 ரூபாயில் இருந்து 169 ரூபாய் ஆக உயர்ந்துள்ளது. சூரியகாந்தி எண்ணெய் விலை 128 ரூபாயில் இருந்து 195 ரூபாய் ஆக உயர்ந்துள்ளது. பாமாயில் விலை 95 ரூபாயில் இருந்து 130 ரூபாய் ஆக உயர்ந்துள்ளது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications