21வயதில் விமானத்தை இயக்கிய.. இந்தியாவின் முதல் பெண் விமானி சர்லா துக்ரலுக்கு..கூகுள் டூடுல் வெளியீடு
டெல்லி: இந்தியாவின் முதல் பெண் விமானியான சர்லா துக்ரலின் 107ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரை கவுரவிக்கும் வகையில் கூகுள் டூடுல் வெளியிடப்பட்டுள்ளது.
முக்கிய சாதனை புரிந்தவர்களைக் கொண்டாடும் வகையில் கூகுள் நிறுவனம் டூடுல்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளது.
இன்று கூகுள் தளத்திற்குச் சென்றவர்கள் பெண் விமானி ஒருவரது டூடுலை பார்த்திருக்கக் கூடும்.

இந்தியாவின் முதல் பெண் விமானி
அவர் வேறு யாருமில்லை, அவர் தான் இந்தியாவின் முதல் பெண் விமானி சர்லா துக்ரல். கடந்த 1914ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி டெல்லியில் பிறந்த இவர், அதன் பிறகு தற்போது பாகிஸ்தானில் இருக்கும் லாகூர் நகருக்குக் குடிபெயர்ந்தார். அவரது கணவர் ராணுவத்தில் விமானியாக பணிபுரிந்தார். இதைக் கண்டு சர்லா துக்ரலுக்கும் விமானியாக வேண்டும் என விருப்பம் ஏற்பட்டது.

21 வயதில் விமானத்தை இயக்கியவர்
இதற்காக அவர் லூகார் விமான பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்றார். தனது 21ஆவது வயதில் சர்லா துக்ரல் முதல்முறையாக இரட்டை இன்ஜின் கொண்ட சிறு விமானத்தை முதல்முறையாக இயக்கினார். இதன் மூலம் இந்தியாவிலேயே விமானத்தை இயக்கிய முதல் பெண் என்ற சாதனையை அவர் படைத்தார்.

சர்லா துக்ரல்
அத்துடன் நிற்காமல் லூகார் விமான பயிற்சி நிலையத்தில் 1,000 மணி நேர பயிற்சியையும் வெற்றிகரமாக முடித்து, இந்தியாவின் முதல் பெண் விமானி என்ற சிறப்பையும் பெற்றார். அதன் பிறகு பயணிகள் விமானத்தை இயக்க லைசென்ஸ் பெறவும் அவர் பயிற்சி எடுக்கத் தொடங்கினார். இருப்பினும், அதற்குள் 2ஆம் உலகப் போர் ஏற்பட்டதால், அவரால் பயணிகள் விமானத்தை இயக்க லைசென்ஸ் பெற முடியாமல் போனது.

கூகுள் டூடுல்
21 வயதில் விமானத்திற்கு முன் சர்லா துக்ரல் எடுத்துள்ள புகைப்படம், பல கோடி பெண்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் என்றால் மிகையில்லை. இவரது சாதனையைக் கொண்டாடும் வகையிலேயே கூகுள் டூடுல் இப்போது வெளியிடப்பட்டுள்ளது. இது தவிர ஓவியம், நுண்கலை மற்றும் நகை வடிவமைப்பிலும் ஆர்வம் செலுத்தி வந்த சர்லா துக்ரல், கடந்த 2008ஆம் ஆண்டு காலமானார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications