Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செப். 18 முதல் சிறப்பு நாடாளுமன்ற கூட்டம்.. மத்திய அரசு திடீர் அறிவிப்பு.. முன்கூட்டியே தேர்தல்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: வரும் செப்டம்பர் 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை சிறப்பு நாடாளுமன்ற கூட்டம் நடைபெறும் என்று மத்திய நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்ட தொடர் கடந்த ஜூலை மாதம் 20-ந்தேதி தொடங்கியது. இந்த கூட்ட தொடரில் மணிப்பூர் கலவர பிரச்சினை கடுமையாக எதிரொலித்தது. நாடாளுமன்ற கூட்டம் தொடங்கிய நாள் முதல் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்தது வரை எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற 2 அவைகளையுமே ஸ்தம்பிக்க செய்தன. ஆகஸ்ட் 11 ஆம் தேதி மழைக்கால கூட்டத்தொடர் முடிந்தது.

Government called for a special session of Parliament to be held from September 18 to 22

அமளிக்கு மத்தியில் சில மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன. மழைக்கால கூட்டத்தொடரில் மக்களவை, 39 மணி நேரம் இயங்கியதாகவும், தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா, டெல்லி நிர்வாக மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதாகவும் சபாநாயகர் ஓம்பிர்லா கூறினார். மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானமும் கொண்டு வந்தன. இந்த தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்கு பிரதமர் மோடி பதிலளித்து பேசினார்.

சிறப்பு கூட்டத்தொடர்: பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பும் நடைபெற்றது. இதில் மத்திய அரசு வெற்றி பெற்றது. மாநிலங்களவையிலும் தொடர் அமளிக்கு இடையே அவை நடவடிக்கைகள் முடிந்தன. ஆகஸ்ட் 11 ஆம் தேதி இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், வரும் செப்டம்பர் மாதம் 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெறும் என்று மத்திய அரசு திடீரென அறிவித்துள்ளது.

இந்த சிறப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது. பொது சிவில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்படலாம் எனவும் பரவலாக பேசப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தல் முன்கூட்டியே நடைபெறலாம் என ஒரு பேச்சு அடிபடும் நிலையில், இந்த சிறப்பு கூட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் மொத்தம் 5 அமர்வுகள் நடைபெறும் என்று நாடாளுமன்ற விவகரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

திடீர் அறிவிப்பு ஏன்?: இந்த தகவலை தனது எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் பிரகலாத் ஜோஷி பதிவிட்டுள்ளார். ஆக்கப்பூர்வமான விவாதங்கள் இந்த சிறப்பு கூட்டத்தொடரில் நடைபெறும் என்று பிரகலாத் ஜோஷி கூறியுள்ளார். எனினும் கூட்டத்தொடரில் எது குறித்து விவாதிக்கப்படும் என்பது பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை. அதேபோல், சிறப்புக் கூட்டம் நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடத்தில் நடைபெறுமா? அல்லது பழைய கட்டிடத்தில் நடைபெறுமா என்பது பற்றியும் எந்த ஒரு தகவலும் சொல்லப்படவில்லை.

எந்த ஒரு மசோதாவும் தாக்கல் செய்யப்படுமா? என்பது பற்றி சூசகமாக எந்த தகவலும் சொல்லப்படவில்லை. மும்பையில் எதிர்க்கட்சிகள் இன்று ஒன்று கூடி ஆலோசனை நடத்த உள்ள நிலையில், சிறப்பு நாடாளுமன்ற கூட்டம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தியா கூட்டணி காரணமா?: நாடு முழுக்க லோக்சபா தேர்தலுக்காக பாஜக தீவிரமாக தயாராகி வருகிறது. இன்னொரு பக்கம் காங்கிரஸ் - திமுக ஆகியவை சேர்ந்து பிரம்மாண்டமாக இந்தியா என்ற கூட்டணியை தேசிய அளவில் உருவாக்கி உள்ளது. இந்த கூட்டணிக்கான ஆதரவு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. கிட்டத்தட்ட 26 கட்சிகள் இந்த கூட்டணியில் இடம்பெற்று உள்ளன. இந்தக் கூட்டணியில் மேலும் 2 கட்சிகள் இணையும் என்று எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன.

மத்திய பாஜக அரசுக்கு எதிராக 'இந்தியா' கூட்டணி ஒன்று சேர்ந்து இருப்பது ஆளும் பாஜகவுக்கு கடும் நெருக்கடியாக அமையும் என பல்வேறு கருத்துக் கணிப்புகளும் கூறுகின்றன. இதனால், தேர்தலை முன்கூட்டியே நடத்தலாமா? என்பது பற்றியும் மத்திய அரசு பரிசீலித்து வருவதாகவும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Government called for a special session of Parliament to be held from September 18 to 22

தேர்தலுக்கு தயாராகும் வகையில்: இந்த நிலையில், நாடாளுமன்ற சிறப்பு அமர்வு கூட்டம் பற்றிய அறிவிப்பு வெளியாகி மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. சிலிண்டர் விலையை அண்மையில் மத்திய அரசு ரூ.200 குறைத்து அறிவிப்பு வெளியிட்டது. தேர்தலுக்கு தயாராகும் வகையிலேயே மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், 5 நாட்கள் நடைபெற உள்ள சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

எதிர்கட்சிகள் எதிர்ப்பு: சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர் பற்றிய அறிவிப்பை வெளியிட்ட பிரகலாத் ஜோஷி, அமிர்த காலத்தி்ற்கு இடையே வரும் இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமாக இருக்கும் என்று நம்புவதாகவும் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டார். எனவே, அமிர்த கால கொண்டாட்டங்கள் தொடர்பான அஜெண்டாவும் நாடாளுமன்றத்தில் இடம் பெறும் என்று அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

இதனிடையே, சிறப்பு நாடாளுமன்றம் கூடும் என்ற அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்துள்ளன. விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் நடைபெறும் நாட்களில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் நடைபெறுவதாகவும் சிவசேனா (யுபிடி) கட்சி எம்.பி பிரியங்கா சதுர்வேதி விமர்சித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+