டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"அலர்ஜி".. கொரோனா வேக்சின் எடுத்துக்கொண்ட 68 வயது நபர் மரணம்.. இந்தியாவில் முதல் பலி!

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் கொரோனா வேக்சின் எடுத்துக்கொண்ட 68 வயது நபர் பலியானதாக ஏஇஎப்ஐ அமைப்பு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா காரணமாக ஏற்படும் முதல் மரணம் இது என்று ஏஇஎப்ஐ அமைப்பு தெரிவித்துள்ளது.

Recommended Video

    Covaxin vs Covishield vs Sputnik வித்தியாசம் என்ன ? Best Corona vaccine எது?

    இந்தியாவில் கொரோனாவிற்கு எதிராக கோவாக்சின், கோவிஷீல்ட் ஆகிய கொரோனா வேக்சின்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஏஇஎப்ஐ எனப்படும் வேக்சினுக்கு பின்பான பக்கவிளைவுகளை (Adverse Events Following Immunization) ஆராயும் அமைப்பு, கொரோனா வேக்சின் போடப்படும் நபர்களுக்கு ஏற்படும் பக்க விளைவுகளை ஆராய்ந்து வருகிறது.

    கொரோனா வேக்சின் காரணமாக ஏற்படும் சிக்கல்கள், ரத்த கட்டு பிரச்சனை, அலர்ஜி பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பக்கவிளைவுகளை மத்திய அரசின் இந்த ஏஇஎப்ஐ அமைப்புதான் ஆராய்ந்து வருகிறது.

    மேட்டூரில் இருந்து முக்கொம்புக்கு பொங்கி வந்த காவேரி... நெல்மணிகள், மலர்கள் தூவி வரவேற்ற விவசாயிகள் மேட்டூரில் இருந்து முக்கொம்புக்கு பொங்கி வந்த காவேரி... நெல்மணிகள், மலர்கள் தூவி வரவேற்ற விவசாயிகள்

    எப்படி

    எப்படி

    இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா வேக்சின் எடுத்துக்கொண்ட 68 வயது நபர் பலியானதாக ஏஇஎப்ஐ அமைப்பு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதுதான் இந்தியாவில் ஏற்பட்ட அதிகாரப்பூர்வமான மரணம் ஆகும். 68 வயது நிரம்பிய அந்த நபர் அனாபிளாக்சிஸ் (anaphylaxis) எனப்படும் மிக மோசமான, உயிருக்கு பாதிப்பு விளைவிக்க கூடிய அலர்ஜி காரணமாக பலியாகி உள்ளார்.

    மரணம்

    மரணம்

    இந்தியாவில் கொரோனா வேக்சின் எடுத்த பின் 31 பேர் பலியாகி உள்ளனர். இதில் ஒருவர் மட்டுமே வேக்சின் காரணமாக பலியாகி இருக்கிறார். மற்றவர்கள் வேறு வேறு காரணங்களுக்காக பலியானதாக ஏஇஎப்ஐ அமைப்பு கூறியுள்ளது. கொரோனா வேக்சின் எடுத்துக்கொண்டு பலியான 68 வயது நபர் குறித்து கூடுதல் விவரங்களை ஏஇஎப்ஐ அமைப்பின் தலைவர் டாக்டர் என்கே அரோரா வெளியிடவில்லை.

     எப்போது

    எப்போது


    இவருக்கு கடந்த மார்ச் 8ம் தேதி வேக்சின் போடப்பட்டு, அதன்பின் அனாபிளாக்சிஸ் (anaphylaxis) எனப்படும் அலர்ஜி ஏற்பட்டு பலியாகி இருக்கிறார். இது போக வேக்சின் எடுத்த இன்னும் இரண்டு பேருக்கு அனாபிளாக்சிஸ் ஏற்பட்டுள்ளது. இவர்கள் 20 -30 வயது கொண்டவர்கள். இவர்கள் இரண்டு பேருமே மருத்துவ சிகிச்சைக்கு பின் குணமடைந்து உள்ளனர்.

     31 மரணம்

    31 மரணம்

    இந்த 31 மரணங்களில் 18 பேர் கொரோனா வேக்சின் எடுத்த பின் இறந்தாலும், அவர்களின் மரணத்திற்கும் வேக்சினுக்கும் தொடர்பில்லை. 7 பேர் மரணம் குறித்து நிச்சயமற்றதன்மை நிலவுகிறது. 2 பேர் மரணம் வகைப்படுத்த முடியாது. இன்னும் 3 மரணங்களுக்கும்வேக்சினுக்கும் தொடர்பு இல்லை என்று ஏஇஎப்ஐ அமைப்பின் தலைவர் டாக்டர் என்கே அரோரா கூறியுள்ளார்.

    English summary
    Government confirm the First death after the Covid 19 vaccine shot, 68-year-old man died due to anaphylaxis.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X