Anil Chauhan: இரவோடு இரவாக வந்த உத்தரவு! முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான் பதவிக்காலம் நீடிப்பு
டெல்லி: முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சவுகான் பதவிக்காலம் இன்னும் சில நாட்களில் நிறைவடைய இருந்தது. இதற்கிடையே அவரது பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது. 2026 மே 30ம் தேதி வரை அனில் சவுகான் முப்படைகளின் தலைமை தளபதி பதவியில் தொடர்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நமது நாட்டில் ராணுவம், கடற்படை, விமானப்படை என்று பாதுகாப்புப் படையில் மூன்று பிரதான படைகள் உள்ளன. இந்த முப்படைகளுக்கும் தனித்தியாகத் தளபதிகள் இருந்தாலும், இந்த மூன்று படைகளும் ஒருங்கிணைந்து செயல்படுவதில் சிக்கல் இருந்து வந்தது. இதைக் கருத்தில் கொண்டு முப்படைகளுக்கும் தலைமை தளபதி என்ற ஒரு பதவி 2020ல் உருவாக்கப்பட்டது.

இந்தப் பதவியில் முதலில் பிபின் ராவத் இருந்தார். 2021ம் ஆண்டு இறுதி வரையிலும் பிபின் ராவத் தான் முப்படைகளின் தலைமை தளபதியாக இருந்தார். இந்தச் சூழலில் தான் அவர் எதிர்பாராத விதமாக உதகை அருகே ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து கடந்த 2022 செப்டம்பர் மாதம் நாட்டின் 2வது முப்படைகளின் தலைமை தளபதியாக அனில் சவுகான் நியமிக்கப்பட்டார்.
அவரது பதவிக்காலம் 3 ஆண்டுகள் இருக்கும் என அப்போதே தெரிவிக்கப்பட்டது. அதன்படி அவரது பதவிக்காலம் இன்னும் சில நாட்களில் நிறைவடை இருந்தது. இந்தச் சூழலில் தான் அனில் சவுகான் பதவிக்காலத்தை நீடித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி 2026 மே 30 வரை அல்லது அடுத்த அறிவிப்பு வரும் வரை முப்படைகளின் தலைமைத் தளபதியாக ஜெனரல் அனில் சவுகான் இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது அனில் சவுஹானுக்கு 8 மாதங்கள் பதவி நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு இதற்கான அனுமதியை வழங்கியது.












Click it and Unblock the Notifications