Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பல மடங்கு உயரும்.. அரசு ஊழியர்களின் சம்பளம்.. லைவ் எடுத்த மத்திய அரசு.. பணம் கொட்ட போகுது!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில், 8-வது மத்திய ஊதியக் குழு (8th CPC) தனது கலந்தாய்வுப் பணிகளை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. இதற்கான பிரத்யேக இணையதளம் தற்போது லைவ் ஆகி உள்ளது, இதில் பொதுமக்களின் கருத்துக்களைப் பெறுவதற்கான பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஊதியம், ஓய்வூதியம் மற்றும் இதர படிகளில் மாற்றம் கொண்டு வருவதற்கான இந்த நடைமுறை, டிஜிட்டல் முறையில் வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறுகிறது.

dearness allowance

கருத்துக்களைப் பகிர மார்ச் 16 கடைசி நாள்

மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, MyGov தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ள வினாக்களுக்குப் பதிலளிப்பதன் மூலம் ஊழியர்கள் மற்றும் இதர பங்குதாரர்கள் தங்கள் கோரிக்கைகளைத் தெரிவிக்கலாம். இதற்கான காலக்கெடு 2026, மார்ச் 16, திங்கள்கிழமை அன்று முடிவடைகிறது.

முக்கியமாக, இந்தக் பதில்கள் அனைத்தும் மின்னணு முறையில் மட்டுமே சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

"காகித வடிவிலான கடிதங்கள், மின்னஞ்சல்கள் அல்லது PDF கோப்புகள் மூலம் அனுப்பப்படும் கருத்துக்களை ஊதியக் குழு பரிசீலிக்காது. அனைத்து பதில்களும் MyGov இணையதளம் மூலமாக மட்டுமே வழங்கப்பட வேண்டும்," என அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தரவுகள் அனைத்தும் ரகசியமாக வைக்கப்படும் என்றும், தனிநபர்களின் விபரங்கள் எக்காரணம் கொண்டும் வெளியிடப்படாது என்றும் அரசு உறுதியளித்துள்ளது.

முக்கியமான 18 கேள்விகள்

பங்குதாரர்களின் கருத்துக்களைக் கேட்பதற்காக 18 முக்கிய கேள்விகள் அடங்கிய ஒரு கேள்வித்தாளை ஊதியக் குழு வெளியிட்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள சில முக்கிய அம்சங்கள்:

ஃபிட்மென்ட் ஃபேக்டர் (Fitment Factor): ஊதிய உயர்வு திருத்தத்தில் இந்த காரணி எவ்வாறு அமைய வேண்டும்?

ஊதிய ஒப்பீடு: உயர்மட்ட அரசுப் பணியிடங்களின் ஊதியத்தை எதனடிப்படையில் நிர்ணயம் செய்ய வேண்டும்?

வருடாந்திர உயர்வு: பல்வேறு நிலைகளில் பணியாற்றும் ஊழியர்களின் ஆண்டு ஊதிய உயர்வு (Increment) முறை எவ்வாறு இருக்க வேண்டும்?

ஓய்வூதிய சீர்திருத்தங்கள்: ஓய்வூதியம் மற்றும் இதர படிகள் தொடர்பாக நிலவும் எதிர்பார்ப்புகள் என்ன?

யாரெல்லாம் பங்கேற்கலாம்?

மத்திய அரசு ஊழியர்கள் மட்டுமல்லாது, யூனியன் பிரதேச ஊழியர்கள், நீதித்துறை அதிகாரிகள், நீதிமன்ற ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், தொழிற்சங்கங்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பொதுநலன் விரும்பும் எந்தவொரு தனிநபரும் இந்த கலந்தாய்வில் பங்கேற்று தங்கள் மேலான கருத்துக்களைப் பதிவு செய்யலாம்.

பின்னணி மற்றும் காலக்கெடு

மத்திய ஊதியக் குழுக்கள் பொதுவாக ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை அமைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், 8-வது ஊதியக் குழு கடந்த 2025 ஜனவரியில் அறிவிக்கப்பட்டு, 2025 நவம்பர் 3 அன்று நிதி அமைச்சகத்தால் முறைப்படி அறிவிக்கப்பட்டது.

இந்தக் குழு தனது பரிந்துரைகளைச் சமர்ப்பிக்க 18 மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் பரிந்துரைகள் நடைமுறைக்கு வரும்போது, அது சுமார் 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 67 லட்சம் ஓய்வூதியதாரர்களின் வாழ்வாதாரத்தில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னொரு பக்கம் 2026ம் ஆண்டு வந்தாலும் கூட.. புதிய ஊதியக்குழு அமலுக்கு வராது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இப்போதைக்கு 7வது ஊதியக்குழுவின் பயன்கள் அப்படியே தொடரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான 8வது ஊதியக் குழு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதியோடு 7வது ஊதியக்குழு முடிவிற்கு வந்துவிட்டது. இதனால் 8வது ஊதியக்குழு ஜனவரி 1ல் தொடங்கி இருக்க வேண்டும். ஆனால் உண்மையில் ஊதியக்குழு தொடங்க இன்னும் 1-2 வருடங்கள் ஆகும்.

இதனால் அதுவரை 7வது ஊதியக்குழுவின் அடிப்படையில்தான் சம்பளம் வழங்கப்படும். 8வது ஊதியக்குழுவின் கீழ் யார் தகுதியானவர்கள், யார் இல்லை, திருத்தப்பட்ட ஊதியம் எப்போது வரும், எதிர்பார்க்கப்படும் உயர்வு எவ்வளவு என்பதை இக்கட்டுரை விளக்குகிறது.

லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் 8வது ஊதியக் குழு சம்பளம் வழங்க போகிறது எனினும், யார் பலன் பெறுவார்கள், எவ்வளவு உயர்வு, சம்பள மாற்றங்கள் எப்போது போன்ற பல குழப்பங்கள் இன்னும் நிலவுகின்றன. இக்கட்டுரை அந்த சந்தேகங்களைத் தீர்க்கும்.

8வது ஊதியக் குழு

8வது ஊதியக் குழுவின் கீழ் அனைத்து மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் மத்திய சிவில் சேவைகளின் ஊதியக் கட்டமைப்பில் உள்ள அனைவருக்கும் பொருந்தும். பணியாற்றுபவர்கள், ஓய்வுபெற்றவர்கள் என இரு தரப்பினருமே இக்குழுவின் வரம்பிற்குள் வருகின்றனர்.

மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்கள் (PSU), தன்னாட்சி அமைப்புகள் மற்றும் சட்டமுறை நிறுவன ஊழியர்கள் தானாகவே இக்குழுவின் கீழ் வரமாட்டார்கள். சம்பந்தப்பட்ட மாநில மற்றும் நிர்வாக அமைப்புகள், இக்குழுவின் பரிந்துரைகளை ஏற்க முடிவு செய்தால் மட்டுமே பலன் பெறுவர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+