தலைமை தேர்தல் ஆணையர் நியமனம்.. விதிகளில் மிகப்பெரிய மாற்றம்.. சர்ச்சை மசோதா இன்று தாக்கல்
டெல்லி: தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் விதிகளில் மாற்றம் செய்யும் புதிய சட்ட மசோதாவை இன்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்ய போகிறது. சர்ச்சைக்குரியதாக விமர்சிக்கப்படும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், தேர்தல் ஆணையரை நியமிக்கும் குழுவில் உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி இடம்பெற மாட்டார்.
தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல்ஆணையர்கள் மத்திய அமைச்சரவையின் பரிந்துரை அடிப்படையில் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுவது இந்தியாவில் வழக்கமாக உள்ளது. இதன் காரணமாக தேர்தல் ஆணையம் என்பது மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. மேலும் தேர்தல் ஆணையர்கள் நியமனத்தில் சீர்திருத்தம் கொண்டுவர வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை 5 நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரித்து கடந்த மார்ச் மாதம் தீர்ப்பளித்தது. இதன்படி, மத்திய அரசு தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமனம் செய்வது தொடர்பாக ஒரு சட்டம் இயற்ற வேண்டும். அதுவரை, பிரதமர், மக்களவை எதிர்க்கட்சி தலைவர், தலைமை நீதிபதி ஆகிய 3 பேர் அடங்கிய குழுதான் தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்களை குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் அரசியல் சாசனத்துக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டது.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் குழுவில், 1) பிரதமர்2) எதிர்க்கட்சித் தலைவர் 3) இந்திய தலைமை நீதிபதி ஆகியோர் மட்டுமே இருக்க முடியும் என்கிற நிலை உள்ளது.
இந்த சூழலில்தான் இந்நிலையில் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான முக்கிய சட்டத்திருத்தத்தை இன்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறது. இதன் மூலம் உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு இணையாக தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர் பதவிகளைத் தக்கவைக்க மசோதாவில் திருத்தம் கொண்டுவருகிறது.
புதிய சட்டத்திருத்தத்தின் படி, குழுவில் இருப்பவர்கள், 1) பிரதமர் 2) எதிர்க்கட்சித் தலைவர், மக்களவை3) பிரதமரால் பரிந்துரைக்கப்பட்ட மத்திய அமைச்சரவை அமைச்சர் (தலைமை நீதிபதிக்கு பதிலாக) அதாவது மொத்தம் உள்ள மூன்று ஓட்டில் பிரதமர் மற்றும் பிரதமர் சார்பாக அமைச்சர் உள்ளதால், பிரதமரே அடுத்த தலைமை தேர்தல் ஆணையரை தீர்மானிக்கும் நிலை உருவாகும். இந்த சட்டத்திருத்தம் அமலுக்கு வந்தால், தேர்தல் ஆணைய நியமனத்தில் நீதிமன்றங்களின் தலையீடுக்கு இதன் மூலம் கிட்டதட்ட முடிவுக்கு வரும் என்கிறார்கள்.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது?












Click it and Unblock the Notifications