Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெண்களுக்கு இனி பெண் ஓட்டுநர்கள்! நோ டிப்ஸ் கட்டாயம்! சாட்டையை சுழற்றிய மத்திய அரசு! முக்கிய உத்தரவு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நமது நாட்டில் ஊபர், ஓலா, ரேபிடோ போன்ற செயலிகள் மிகப் பெரியளவில் பயன்படுத்தப்பட்டு வரும் சூழலில், இந்தத் துறையில் மத்திய அரசு சில முக்கியமான மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி இனிமேல் சவாரி தொடங்கும் முன்பே டிப்ஸ் கோர முடியாது. மேலும், பெண் பயணிகள் தங்களுக்குப் பெண் டிரைவர்களை தேர்வு செய்யும் ஆப்ஷன் கட்டாயம் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

இந்தியாவில் ஊபர், ஓலா, ரேபிடோ போன்ற செயலிகள் வேகமாகப் பிரபலமடைந்து வருகிறது. இதை ஆங்கிலத்தில் Ride-hailing- ரைட் ஹைலிங் என்கிறார்கள். இந்த துறையில் தேவையான மாற்றங்களை மத்திய, மாநில அரசுகள் இப்போது தான் மெல்ல மேற்கொண்டு வருகின்றன. இதற்கிடையே இதில் சில முக்கிய மாற்றங்களை இப்போது மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

Govt Bans Advance Tipping on Ride-Hailing Apps Mandates Female Driver Option for Women Passengers

சவாரி

சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம், மோட்டார் வாகன ஒருங்கிணைப்பாளர்கள் வழிகாட்டுதல்களில் திருத்தங்களைச் செய்துள்ளன. இது குறித்து விரிவான செய்திக்குறிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி சவாரிக்கு முன்பே, குறிப்பிட்ட ரைட்டிற்கு டிப்ஸ் பெறும் வசதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதனால் இனிமேல் ஊபர், ஓலா, ரேபிடோ போன்ற செயலிகள் சவாரி தொடங்குவதற்கு முன்பே பயணிகளிடம் டிப்ஸ் கோர முடியாது.

டிப்ஸ் என்பது முழுக்க முழுக்க ஒருவர் தானாக விருப்பப்பட்டுக் கொடுக்கும் தொகை தான். அது கட்டாயம் இல்லை.. மேலும், பொதுவாக எந்தவொரு சர்வீஸாக இருந்தாலும் அது முடிந்த பிறகு சர்வீஸ் திருப்திகரமாக இருந்தால் பொதுமக்கள் டிப்ஸ் கொடுப்பார்கள். அப்படியிருக்கும்போது சவாரி தொடங்குவதற்கு முன்பே டிப்ஸ் கேட்பதில் லாஜிக் இல்லை எனப் பலரும் கண்டித்தனர். இதைத் தொடர்ந்தே மத்திய அரசு இதற்குத் தடை விதித்துள்ளது.

டிப்ஸ் கோர முடியாது

இந்த மாற்றம் காரணமாக இனிமேல் ரைட் தொடங்கும் முன்பு டிப்ஸ் கோர முடியாது. ரைட் முடிந்த பிறகே ஒருவர் விருப்பப்பட்டால் டிப்ஸ் கொடுக்கலாம். ரைட் தொடங்கும் முன்பே ரூ.10 முதல் ரூ.50 வரை டிப்ஸ் கொடுத்தால் தான் ஈஸியாக கார் அல்லது ஆட்டோ கிடைக்கும் என்று யூசர்களிடையே இந்தச் செயலிகள் அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தன. இது தொடர்பாகப் பல்வேறு தரப்பினரும் அழித்த புகாரைத் தொடர்ந்து இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களின் பிரிவு 14.15இன்படி, "ஓட்டுநருக்கு ஒருவர் விருப்பப்பட்டால் டிப்ஸ் வழங்கலாம். ஆனால், இதை சவாரி முடிந்த பின்னரே தெரியப்படுத்த வேண்டும்.. புக் செய்யும்போது இல்லை" என்று கூறப்பட்டுள்ளது. மேலும், டிப்ஸ் என்பது கூடுதல் தொகை என்பதால் அந்த முழு தொகையும் சம்பந்தப்பட்ட ஓட்டுநருக்கே செல்ல வேண்டும் என்றும் அதில் எந்தவொரு கமிஷன் எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும் மத்திய அரசு திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

என்ன சிக்கல்

இந்தியாவில் இதுபோல முன்கூட்டியே டிப்ஸ் வழங்கும் மாடலை 2023ல் பெங்களூரில் நம்மா யாத்ரி என்ற செயலி அறிமுகப்படுத்தியது. பீக் ஹவர்ஸில் சற்று அதிகப் பணம் கொடுத்தால் ஆட்டோ அல்லது கார் ஈஸியாக கிடைக்கும் என்பதே இதன் கான்சப்ட். தொடர்ந்து ரேபிடோ செயலியும் இதைப் பயன்படுத்த ஆரம்பித்தது. நல்ல வரவேற்பு இருக்கவே ஊபர், ஓலா போன்ற பெரிய நிறுவனங்களும் அதைப் பின்பற்றின. இருப்பினும், ஒரு கட்டத்திற்கு மேல், கூடுதல் தொகை கொடுத்தால் தான் டாக்ஸி அல்லது ஆட்டோ கிடைக்கும் என்ற நிலை உருவானதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.

பெண் ஓட்டுநர்கள்

மேலும், இதில் இன்னொரு முக்கிய மாற்றமும் செய்யப்பட்டுள்ளது. அதாவது பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரிவு 15.6ன்படி, "பெண் பயணிகள் பெண் ஓட்டுநர்களைத் தேர்வு செய்ய ஆப்ஷனை செயலிகள் கட்டாயம் சேர்க்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது. அதாவது பெண் பயணிகள் தங்களுக்குப் பெண் டிரைவர்கள் வேண்டும் என நினைத்தால் நிச்சயம் அதைத் தேர்வு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

இப்போது 1%க்கும் குறைவாகவே பெண் ஓட்டுநர்கள் உள்ள நிலையில், இந்த விதியால் அந்த எண்ணிக்கை அதிகரிக்கும் எனத் தெரிகிறது. இந்தத் திருத்தங்களை மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் உடனடியாக அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இது ரைட் ஹைலிங் துறையில் பல முக்கிய மாற்றங்களைக் கொண்டு வரும் எனத் தெரிகிறது. அதேநேரம் இது தொடர்பாகச் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் எந்தவொரு கருத்தையும் கூறவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+