சிறு சேமிப்பு திட்டங்கள்... அனைத்திற்கும் வட்டி விகிதம் குறைப்பு.. நிதியமைச்சகம் அறிவிப்பு
டெல்லி: பல்வேறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்கள் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் குறைக்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.
நாளை ஏப்ரல் 1ஆம் தேதி புதிய நிதியாண்டு தொடங்கும் நிலையில், பல்வேறு சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களைக் குறைத்து நிதியமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி வங்கி சேமிப்பு கணக்குகளின் ஆண்டு வட்டி 3.5%ஆக குறைக்கப்படுகிறது. இது தற்போது 4%ஆக உள்ளது. பொது வருங்கால வைப்பு நிதி எனப்படும் PPF வட்டி 7.1%இல் இருந்து 6.4%ஆக குறைக்கப்படுகிறது.
ஓராண்டுக் கால வைப்புத் தொகைக்கான வட்டி 5.5%ல் இருந்து 4.4%ஆக குறைக்கப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதம் 7.4%இல் இருந்து 6.5%ஆக குறைக்கப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டங்களில் வட்டி காலாண்டிற்கு ஒரு முறை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டத்திற்கு 5.9 சதவீத வட்டியையும், சுகன்யா சமிர்தி யோஜனா திட்டத்திற்கு 6.9 சதவீத வட்டியும் அறிவிக்கப்பட்டுள்ளது. கிசான் விகாஸ் பத்ரா வட்டி விகிதம் 6.2%ஆக குறைக்கப்பட்டுள்ளது.
அஞ்சலக சேமிப்பு வைப்புத்தொகைக்கான வட்டி விகிதம் 3.5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதே நேரம் 1 முதல் 5 ஆண்டுகள் வரையிலான வைப்புத் தொகைக்கு 4.4-5.1 சதவீதமும், ஐந்து ஆண்டுகளுக்கு ஆன வைப்புத் தொகைக்கு வட்டி 5.8 சதவீதமாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஓர் ஆண்டில் சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் குறைக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications