டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மக்களை முட்டாளாக்குவதை நிறுத்துங்க சார்! இனிமே பெட்ரோல் விலை ஏறலாம்! எச்சரிக்கும் ராகுல் காந்தி..!

Google Oneindia Tamil News

டெல்லி : பெட்ரோல் டீசல் விலை இனிமேல் தினமும் உயரும் எனவும், மக்களை முட்டாளாக்குவதை நிறுத்திவிட்டு உண்மையான நிவாரணத்தை வழங்க வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி கூறியுள்ளார்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்கிறபோதெல்லாம், அதற்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை நிறுவனங்கள் உயர்த்துகிறபோது அது பொதுமக்களுக்கு பெரும் சுமையாக இருந்தது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாத கடைசியில் ஒரே வாரத்தில் 5 முறை பெட்ரோல் டீசல் விலை அதிகரித்தது. இதனால் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்தது.

மத்திய அரசு குறைத்துவிட்டது.. பெட்ரோல் டீசல் வரியை இந்த விடியா அரசு குறைக்குமா.. எடப்பாடி அறிக்கை மத்திய அரசு குறைத்துவிட்டது.. பெட்ரோல் டீசல் வரியை இந்த விடியா அரசு குறைக்குமா.. எடப்பாடி அறிக்கை

பெட்ரோல் விலை

பெட்ரோல் விலை

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 104.68 ருபாய்க்கும், டீசல் 100.74 ரூபாய் என்ற அளவுக்கு உயர்ந்ததால் அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், அரிசி, பருப்பு உள்ளிட்டவற்றின் விலையும் கணிசமாக அதிகரித்தது. இதனால் மக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வந்தனர். பெட்ரோல், டீசல் விலையில் மத்திய அரசு விதிக்கிற உற்பத்தி வரியும், மாநில அரசுகள் விதிக்கும் உள்ளூர் வரிகளும் மதிப்பு கூட்டு வரி பெரும்பங்கு வகிக்கின்றன.

விலை குறைப்பு

விலை குறைப்பு

எனவே மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 9.50 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் சமான்ய மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகிவந்த நிலையில் தான் இந்த அறிவிப்பு நேற்று வெளியானது.

அரசு அதிரடி

அரசு அதிரடி

இந்நிலையில் கடந்த 40 நாட்களாக விலையில் எந்தவித மாற்றமுமின்றி இருந்தது. இந்நிலையில் தற்போது பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 9.50 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். பெட்ரோல் மீதான கலால் வரி ரூ.8ம், டீசல் மீதான கலால் வரி ரூ.6ம் குறைக்கப்பட்டுள்ளது.

ராகுல் காந்தி விமர்சனம்

ராகுல் காந்தி விமர்சனம்

இந்நிலையில் பெட்ரோல் டீசல் விலை இனிமேல் தினமும் உயரும் எனவும், மக்களை முட்டாளாக்குவதை நிறுத்திவிட்டு உண்மையான நிவாரணத்தை வழங்க வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவ்ட்டர் பதிவில், "பெட்ரோல் விலை 2020 மே 21ல் ரூ.69.05 ஆகவும், 2022 மார்ச் 1 ல் ரூ.95.4 ஆகவும், 2022 மே 1 ல் ரூ.105.4 ஆகவும், இன்று மே 22 ல் ரூ.96.07 ஆகவும் இருந்தது. இனி, தினந்தோறும் 0.8 மற்றும் 0.3 பைசா என்ற அளவில் உயர துவங்கும் என எதிர்பார்க்கலாம். மக்களை முட்டாளாக்குவதை அரசு நிறுத்த வேண்டும். பணவீக்கத்தில் இருந்து உண்மையான நிவாரணம் பெற மக்களுக்கு தகுதி உண்டு" என பதிவிட்டுள்ளார்.

English summary
Former Congress leader and Member of Parliament Rahul Gandhi has said that petrol and diesel prices will continue to rise day by day and that people should stop fooling around and provide real relief.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X