சாலை விதிமீறல்: வருது செக்! இனி ஃபைன் கட்டாமல் தப்ப முடியாது.. மத்திய அரசின் மேஜர் பிளான்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: வாகன உரிமையாளர்கள் மற்றும் டிரைவிங் லைசன்ஸ் வைத்து இருப்பவர்கள் தங்களின் சுய விவரங்கள் மற்றும் மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களை ஆதார் கார்டில் இருக்கும் முகவரிக்கு ஏற்ப மாற்றுவதை கட்டாயம் ஆக்குவது குறித்து மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. டேடா பேஸ்களை துல்லியமாக பராமரித்து விதி மீறல்களில் ஈடுபடுபவர்களுக்கு செக் வைக்கும் வகையில் இந்த மாற்றத்தை கொண்டு வர ஆலோசித்து வருகிறதாக சொல்லப்படுகிறது.

வாகன உரிமையாளர்கள் டிரைவிங் லைசன்ஸ் வைத்து இருப்பவர்கள் தங்களின் மொபைல் எண்கள், வீட்டு முகவரி உள்ளிட்ட முக்கிய விவரங்களை அப்டேட் செய்யும் வகையில் மோட்டார் வாகன சட்டங்களில் திருத்தம் கொண்டு வருவது பற்றி மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் ஆலோசித்து வருகிறது.

road transport central government

சாலைப் போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடும் போது, தற்போது ஆன்லைன் முறையில் பெரும்பாலும் அபராதம் விதிக்கப்படுகிறது. இப்படி விதிக்கப்படும் அபராதங்களை சிலர் கட்டுவது இல்லை. எவ்வளவு அபராதம் சேந்தாலும் அபராதம் கட்டாமல் சில வாகன ஓட்டிகள் இயக்குவதோடு, மீண்டும் மீண்டும் போக்குவரத்து விதி மீறலில் ஈடுபடுகிறார்கள். வாகன உரிமையாளர்கள் அளித்துள்ள அடையாள விவரங்கள் பல நேரங்களில் சரியானதாக இல்லை.

இதனால் விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க முடியாத நிலை உள்ளது. எனவே இத்தகைய குறைகளை போக்கும் வகையில் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன உரிமையாளர்கள் தங்கள் முகவரி (ஆதார்), மொபைல் எண் உள்ளிட்டவற்றை அப்டேட் செய்வதை கட்டாயம் ஆக்கும் வகையில் புதிய விதியை கொண்டு வருவது பற்றி மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் ஆலோசித்து வருகிறது.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், "விதிகளை மீறும் வாகன ஓட்டிகளை கண்டறிய சில வரைமுறைகள் தேவைப்படுகின்றன. குறிப்பாக அடிக்கடி போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் சாலையில் சக வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து விளைவிப்பவராகவும் உள்ளனர். விதி மீறலில் ஈடுபட்டு அபராதம் இருந்தால் கூட, அவற்றை கட்டாமல் தப்பிக்க மொபைல் எண்ணை மாற்றிவிட்டு புதிய டிரைவிங் லைசன்சை வாங்கி விடுகிறார்கள்" என்றார்.

அண்மையில் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சக செயலர் வி உமாசங்கர் சாலை பாதுகாப்பு தொடர்பான மாநாடு ஒன்றில் பேசுகையில் கூறியதாவது:- 12 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புக்கு மேல் இ செலான்கள் விதிக்கப்பட்டு கட்டப்படாமல் உள்ளன. இதற்கு முக்கிய காரணம் டேடா பேஸ் சிஸ்டம் சரியானதாக இல்லை. எனவே, தரவுகளை துல்லியமாக வைத்து இருக்க வேண்டிய அவசியம் உள்ளது.

சாரதி மற்றும் வாஹன் செயலியில் 1960, 70, 80, 90 களில் உள்ள சில டிரைவிங் லைசன்ஸ் மற்றும் வாகன பதிவு சான்றிதழ்கள் உள்ளன. இந்த பழமையான டேடா பேஸ்களில் மொபைல் எண்ணோ, ஆதார் எண்களோ இல்லை. முகவரி கூட சரியானதாக இல்லை. எனவே, வாகன உரிமையாளர்களும் லைசன்ஸ் வைத்து இருப்பவர்களும் தங்கள் தரவுகளை அப்டேட் செய்வதற்கு ஒரு விதிமுறை தேவைப்படுகிறது.

இ செலான்கள் விதிக்கப்பட்டு அபராதம் கட்டாத பட்சத்தில் யாரை தொடர்பு கொள்ள வேண்டும்? எங்கு தொடர்பு கொள்ள வேண்டும் என்பதை ஏஜென்சிகள் அறிய இது உதவும்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+