ராணுவ வீரர்களுக்கான மாற்றுத்திறனாளி பென்சனுக்கும் வரியா? கொதித்த காங்.! ராஜ்நாத்சிங் பதில்
டெல்லி: ராணுவ வீரர்களுக்கான மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியத்திற்கு வரி விதிப்பது தொடர்பான விஷயத்தை அரசு பரிசீலிக்கும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
மக்களவையின், பூஜ்ஜிய நேரத்தில் இதுதொடர்பாக கேள்வி எழுப்பிய காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக்கு அவர் பதிலளித்து இவ்வாறு தெரிவித்தார்.

இந்த விவகாரம் தனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், அதை நான் பரிசீலிப்பேன் என்றும் ராஜ்நாத்சிங் கூறினார். பாதுகாப்பு துறை, மற்றும் ராணுவ வீரர்களின் நலன்கள் அரசின், முன்னுரிமை. கடந்த 40 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள ஒரு ரேங்க் ஒரு ஓய்வூதியத்தை அமல்படுத்தியது தேசிய ஜனநாயக கூட்டணி அரசுதான். இவ்வாறு ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.
ராணுவ வீரர்களின், மாற்றுத்திறனாளி ஓய்வூதியத்திற்கு வரி விதிக்கும் திட்டத்தை, மத்திய அரசு கையில் எடுத்துள்ளதை, காங்கிரஸ் விமர்சித்து வருகிறது. பாஜக அரசு, ராணுவ செலவினங்களைக் குறைப்பதன் மூலம், ராணுவத்தை மீண்டும் அவமதித்துள்ளது என்றும் குற்றம்சாட்டியது.
காங்கிரஸ் வெளியிட்ட ஒரு அறிக்கையில், "நாட்டின் முக்கிய சேவையின் போது, ராணுவ வீரர்கள் காயங்கள் காரணமாக மாற்றுத்திறனாளியாக மாறுகிறார்கள். அவர்கள் பணி உயர்வு பெற முடிவதில்லை. மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியத்துடன், பெரும்பான்மையானவர்கள் முன்கூட்டியே ஓய்வு பெற விரும்புகிறார்கள். அப்படிப்பட்ட ஓய்வூதியத்தின் மீது வரி போடுவது என்பது ராணுவ வீரர்களுக்கு செய்யும் துரோகம்" இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications