பொது சிவில் சட்டம் குறித்து விவாதம்.. நாடாளுமன்ற நிலைக்குழு முன் சட்ட ஆணையம் இன்று ஆஜர் - விளக்கம்
டெல்லி: பொது சிவில் சட்டம் தொடர்பான விவாதத்திற்காக நாடாளுமன்ற நிலைக்குழு முன்பாக சட்ட ஆணையம் இன்று ஆஜராக உள்ளது... அதேசமயம், வரவிருக்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், பொது சிவில் சட்டம் தாக்கல் செய்யப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன..
திருமணம், விவாகரத்து, சொத்துப் பகிர்வு உள்ளிட்டவை தொடர்பாக இந்தியா முழுவதும், எல்லாருக்குமான பொதுவான பொது சிவில் சட்டத்தை கொண்டுவர மத்திய அரசு முயற்சித்து வருகிறது.
மத்திய பாஜக: எனவே, பொது சிவில் சட்டம் குறித்து அனைத்து தரப்பினரிடமும் புதிதாக கருத்துகளை கோரும் நடவடிக்கையையும், மத்திய சட்ட ஆணையம் மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பான பொது அறிவிப்பை, கடந்த 14ம் தேதியே சட்ட ஆணையம் வெளியிட்டிருந்தது..

இதனிடையே, நாட்டில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படுவது அவசியம் என்ற கருத்தை பிரதமர் மோடியும் முன்வைத்திருந்தார்.. குறிப்பாக, "2 விதமான சட்டங்களால் நாட்டு நிர்வாகத்தை நடத்த முடியாது... நாட்டு மக்கள் அனைவரும் சமம் என அரசியல் சாசனம் சொல்வதால், நாட்டில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது அவசியமே.. ஆனாலும், பொது சிவில் சட்ட விவகாரத்தில் சிலர் தவறான கருத்துகளை பரப்பி, மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர்" என்று தெரிவித்திருந்தார்.
சிவில் சட்டம்: எனினும், அவரது கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் என இரண்டுமே எழுந்துள்ளது. எதிர்க்கட்சிகள் இதை எதிர்க்க காரணம், இதை பாஜக அரசியலாக்குகிறது என்கிறார்கள்.. அதாவது விரைவில் எம்பி தேர்தல் வரப்போவதால், ஆளும் பாஜக பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதில் தீவிரமாக இருப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன...
இப்படிப்பட்ட சூழலில்தான், சட்டம் மற்றும் பணியாளர் விவகாரங்கள் மீதான நாடாளுமன்ற நிலைக் குழுவானது, பொது சிவில் சட்ட விவகாரம் குறித்து மத்திய அரசின் சட்ட ஆணையம் மற்றும் சட்ட அமைச்சக பிரதிநிதிகளிடம் விளக்கம் பெற உள்ளது. இதற்காக இன்றைய தினம் தங்கள் முன்பு நேரில் ஆஜராகும்படியும் அவர்களுக்கு அழைப்பு அனுப்பியிருந்தது.
இன்று அழைப்பு: இந்த அழைப்பின்படி, சட்ட ஆணையம் மற்றும் சட்ட அமைச்சக பிரதிநிதிகள், பொது சிவில் சட்டம் தொடர்பான அறிக்கை விபரங்களை நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் இன்று தெரிவிக்க போகிறார்கள்..
பொது சிவில் சட்டம் தொடர்பாக, இதுவரை சுமார் 9 லட்சம் கருத்துகள் பதிவாகியுள்ளதாக கூறப்படும் நிலையில், ஆம்ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் இந்த சட்டத்திற்கு ஆதரவு தந்துள்ளன.. விரைவில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ளதால், அந்த கூட்டத் தொடரிலேயே பொது சிவில் சட்டம் கொண்டு வர வாய்ப்புள்ளதாகவும் டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.
எகிறும் எதிர்பார்ப்பு: பொது சிவில் சட்டத்தில் பல்வேறு தரப்பினரிடமும் இருந்து பெறப்பட்ட கருத்துகள் பற்றிய விவாதத்துக்காக இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இன்று ஏற்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications