Grok AI பரப்பும் ஆபாசம்.. 72 மணிநேர கெடுவுடன் X வலைதளத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ்.. கடும் வார்னிங்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உலகின் நம்பர் ஒன் பணக்காரராக இருக்கும் எலான் மஸ்க்கின் எக்ஸ் தளத்திற்கு (முன்பு ட்விட்டர்) மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் 72 மணிநேரம் கெடுவிதித்து கடும் வார்னிங்குடன் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. எக்ஸ் வலைதள பக்கத்தில் க்ரோக் (Grok) ஏஐ பயன்பாடு உள்ளது. அந்த ஏஐ-யை பயன்படுத்தி ஆபாசமான படங்கள் உருவாக்கப்படும் நிலையில் அதனை கட்டுப்படுத்த வேண்டும் என்று அதிரடியாக நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: ‛‛எக்ஸ் வலைதளத்தில் க்ரோக் எனும் ஏஐ பயன்பாடு உள்ளது. இந்த ஏஐ பயன்படுத்துவதை கட்டுப்படுத்த வேண்டும். ஏனென்றால் ஆபாசமான மற்றும் சம்மதமற்ற படங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. இது பெண்களின் கண்ணியத்தையும், தனியுரிமையையும் பாதிக்கிறது. இதனால் எக்ஸ் வலைதளத்தில் தேவையான ஏஐ பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

மேலும் சட்டத்துக்கு புறம்பாக உருவாக்கப்பட்ட பல்வேறு போட்டோ உள்பட பிற உள்ளடக்கங்களை உடனடியாக நீக்க வேண்டும். இதுதொடர்பாக 72 மணிநேரத்துக்குள் விரிவான செயல் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இதை செய்ய தவறினால் எக்ஸ் வலைதளத்துக்கான சட்டப்பூர்வ அங்கீகாரம் ரத்து செய்யப்படும். அதோடு எந்தவித முன்னறிவிப்புமின்றி சம்பந்தப்பட்ட வலைதளம் மற்றும் அதற்கு பொறுப்பான அதிகாரிகள் மற்றும் பயனர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+