டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சினிமா டிக்கெட், விமான டிக்கெட், டிவி.. ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்ட பொருட்கள் எவை? இதோ பட்டியல்

Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் டெல்லியில் இன்று நடைபெற்ற 31வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் டிவி, டிஜிட்டல் கேமரா உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் மீதான வரி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.

சினிமா டிக்கெட்டுகள் மீதான வரியும் குறைக்கப்பட்டுள்ளதால், டிக்கெட் விலை குறையும் வாய்ப்புள்ளது.

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு பிறகு நிருபர்களிடம் பேசிய அருண் ஜெட்லி, மொத்தம் 7 பொருட்கள் அதிகபட்ச வரி பிரிவான 28 சதவீதத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

சினிமா டிக்கெட்

சினிமா டிக்கெட்

இதன் மூலமாக 34 வகை பொருட்கள் மட்டுமே இப்போது 28 சதவீத வரி விதிப்பு பிரிவின் கீழ் உள்ளன என்றும் அவர் கூறினார். மேலும் அவர் கூறியதாவது:
100 ரூபாய் வரையிலான சினிமா டிக்கெட் விலை மீதான ஜிஎஸ்டி வரி என்பது 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 100 ரூபாய்க்கு மேற்பட்ட சினிமா டிக்கெட் விலை மீதான ஜிஎஸ்டி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

விமான டிக்கெட்

விமான டிக்கெட்

வீடியோ கேம்ஸ் மீதான ஜிஎஸ்டி வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்படுகிறது. எக்கனாமிக் கிளாஸ் விமான டிக்கெட் விலை மீதான ஜிஎஸ்டி வரி என்பது 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. பிசினஸ் கிளாஸ் விமான டிக்கெட் ஜிஎஸ்டி வரி 12 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. புனித யாத்திரைக்கு செல்வோர் எந்த கிளாஸ் டிக்கெட்டில் பயணித்தாலும் ஒரே மாதிரி வரி செலுத்தினால் போதும்.

டிவி, பவர் பேங்க்

டிவி, பவர் பேங்க்

மானிடர்கள், 32 இன்ச் வரையிலான தொலைக்காட்சிகள், பவர் பேங்க் போன்றவற்றின் மீதான ஜிஎஸ்டி வரி என்பது 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்படுகிறது. வங்கிகளில் அடிப்படை சேமிப்பு கணக்கு வைத்துள்ளோருக்கான சேவைகளின் மீது விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி விதிப்பு நீக்கப்பட்டுள்ளது.

34 வகை பொருட்கள்

34 வகை பொருட்கள்

ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்ட காலத்தில் இருந்து இதுவரை, 28 வகையான பொருட்களை, 28 சதவீத பிரிவில் இருந்து குறைத்துள்ளோம். இப்போது எஞ்சியுள்ள 34 வகை பொருட்களும் ஆடம்பரமானவை. வசதி உள்ளவர்கள் பயன்படுத்தக்கூடியவை. இவ்வாறு அருண் ஜேட்லி தெரிவித்தார். இன்றைய கூட்டத்தில் 33 வகை பொருட்கள் 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக 5 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளன என்று முன்னதாக நிருபர்களிடம் பேசிய புதுச்சேரி அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

English summary
TV, Video games, movie tickets will get cheaper as 31st GST Council meet decides to cut down tax slap on these product.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X