க்ரீம் பன்னுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு? அன்னபூர்ணா சர்ச்சை நினைவிருக்கா.. வெளியான பரபர தகவல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: க்ரீம் பன்னுக்கான ஜிஎஸ்டி தொடர்பாகக் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அன்னபூர்ணா ஓனரின் பேச்சுக்குப் பிறகு சர்ச்சையானது. இதற்கிடையே இப்போது க்ரீம் பன் உட்பட அனைத்து உணவுப் பொருட்களுக்கும் ஜிஎஸ்டி குறைக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அனைத்து திண்படங்களுக்கும் 5% ஜிஎஸ்டி விதிக்க பரிந்துரைக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கோவையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் க்ரீம் பன் ஜிஎஸ்டி குறித்து அன்னபூர்ணா நிர்வாக இயக்குநர் சீனிவாசன் பேசியது சர்ச்சையானது அனைவருக்கும் தெரியும்.

nirmala sitharaman gst vanathi srinivasan

சர்ச்சை: அவர், "பன்னுக்கு ஒரு ஜிஎஸ்டி.. உள்ளே இருக்கும் கிரீமிற்கு ஒரு ஜிஎஸ்டி என இருக்கிறது. இதனால் கஸ்டமர்கள் நீ க்ரீமையும் பன்னையும் தனியாகக் கொடு நான் சேர்த்துச் சாப்பிடுகிறேன் எனப் பிரச்சினை செய்கிறார்கள்" என்று பேசியிருந்தார். மேலும், வரியைக் குறைத்தால் அனைத்திற்கும் குறையுங்கள்.. இல்லை என்றால் அனைத்திற்கும் உயர்த்துங்கள் எனக் கோரிக்கை வைத்திருந்தார்.

அவரது இந்த பேச்சு இணையத்தில் டிரெண்டான நிலையில், மறுநாள் அவர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்டார். இந்த வீடியோவை பாஜகவினர் வெளியிட்ட நிலையில், அதற்கு இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பல அரசியல் தலைவர்களும் சீனிவாசனை கட்டாயப்படுத்தி மன்னிப்பு கேட்டதாகவும் கூறினர். இந்த சர்ச்சையாக வெடித்த நிலையில், தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கேட்டதைத் தொடர்ந்து இது முடிவுக்கு வந்தது.

கிரீம் பன்னுக்கு ஜி.எஸ்.டி: இதற்கிடையே கிரீம் பன்னுக்கு ஜி.எஸ்.டி வரி குறைக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கிரீம் பன் உள்ளிட்ட அனைத்து உணவுப் பொருட்களுக்கும் 5% மட்டுமே ஜிஎஸ்டி வரி விதிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி விகிதங்களைப் பகுத்தறிவு செய்யும் குழுவின் ஆலோசனைக் கூட்டம் கோவாவில் நேற்று நடந்த நிலையில், அதில் தின்பண்டங்கள், நொறுக்கு தீனிகளை 5% ஜிஎஸ்டி வரி வரம்பிற்குள் கொண்டு வரவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கோவாவில் நடந்த இந்தக் கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அதில் பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள், நொறுக்கு திணிகள், ஸ்வீட் என அனைத்திற்கும் 5% பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும், இப்போது உணவுப் பொருட்களுக்கு 5%, 12%, 18% என்று 3 நிலைகளில் ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது. அதை மாற்றி அனைத்திற்கும் 5% வரி விதிக்க பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது.

ஆலோசனை: இருப்பினும், இப்படி அனைத்திற்கும் 5% என வரி விதிக்கும் போது இதனால் வரி இழப்பு ஏற்படலாம். இது குறித்தும் நேற்று நடந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. மேலும், இதனால் மாநில வரி பகிர்வு எந்தளவுக்குப் பாதிக்கும் என்றும் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. மேலும், பென்சில், உடற்பயிற்சி சார்ந்த பொருட்களுக்கு 12% ஜிஎஸ்டியில் இருந்து 5%ஆகக் குறைக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதேநேரம் ரூ.1000க்கு மேல் விற்பனை செய்யப்படும் ஆடைகளின் வரி 5%இல் இருந்து 12% அல்லது 18%ஆக உயர்த்தப்படலாம் எனக் கூறப்படுகிறது.

இன்சூரன்ஸ் ப்ரீமியம்: மேலும், இப்போது 5%, 12%, 18%, 28% என 4 நிலைகளில் வரி வசூலிக்கப்படும் சூழலில், அதை 3 படிநிலையாகக் குறைக்கவும் நேற்று பரிந்துரைக்கப்பட்டது. அதேநேரம் இந்தக் கூட்டத்தில் இன்சூரன்ஸ் ப்ரீமியதிற்கான ஜிஎஸ்டி குறித்து ஆலோசனை எதுவும் நடக்கவில்லை. அது தொடர்பாக டெல்லியில் வரும் நாட்களில் நடக்கும் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+