ஜிஎஸ்டி அதிகாரிகளால் இனி கைது செய்ய முடியாது.. அதிகாரத்தை பறித்த நிர்மலா சீதாராமன்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஜிஎஸ்டி அதிகாரிகளுக்கு இருக்கும் கைது செய்யும் அதிகாரத்தை பறிக்க மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் இன்று நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி சட்ட நடவடிக்கையை தொடங்குவதற்கான வரம்பு ரூ.1 கோடியில் இருந்து ரூ.5 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இனி ஜிஎஸ்டி வரி விகித மாற்றங்கள் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே மேற்கொள்ளப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

gst-officers-arrest-powers-scraps-in-57th-gst-council-meeting-in-delhi

டெல்லியில் இன்று ஜிஎஸ்டி கவுன்சிலின் 57 வது கூட்டம் நடந்தது. டெல்லி, கோவா, ஹரியான, ஹம்மு காஷ்மீர், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் முதல்வர்கள், பிற மாநிலங்களை சேர்ந்த துணை முதல்வர்கள், நிதி அமைச்சர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் ஜிஎஸ்டி வரி விகிதங்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அதேவேளையில் பல்வேறு சீர்த்திருத்த நடவடிக்கைகள் குறித்த ஆலோசிக்கப்பட்டது.

குறிப்பாக ஜிஎஸ்டி அதிகாரிகளுகளுக்கு இருக்கும் கைது நடவடிக்கை தொடர்பான அதிகாரிகள், ரீபண்ட் வழங்கல், பதிவு மற்றும் ரிட்டன் பைலிங் உள்பட பிற பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது பற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

அதன்படி ஜிஎஸ்டி வரி அதிகாரிகளுக்கு கைது செய்யும் அதிகாரம் உள்ளது. இதுபற்றி ஆலோசிக்கப்பட்ட நிலையில் கைது செய்யும் அதிகாரத்தை நீக்குவது தொடர்பாக ஒப்புதல் வழங்கப்பட்டது. அதேபோல் சட்ட நடவடிக்கையை தொடங்குவதற்கான பண வரம்பு ரூ.1 கோடியில் இருந்து ரூ.5 கோடியாக அதிகரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி மேலும் சில சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜிஎஸ்டி வரி விகித மாற்றங்கள் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே மேற்கொள்ளப்பட உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1 முதல் ஜிஎஸ்டி வரி விகித மாற்றங்கள் அமலுக்கு வரும். இதுவரை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டங்களில் வரி விகித மாற்றங்களுக்கு ஒப்புதல் பெறப்பட்டு அவ்வப்போது மாற்றங்கள் நடைமுறையான நிலையில் இனி ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே ஜிஎஸ்டி விரி விகித மாற்றங்கள் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர ஜிஎஸ்டி பதிவில் வழக்கமான மாற்றங்களை தானாக ஏற்கும் நடைமுறைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
கூடுதல் தொழில் இடம் உள்ளிட்ட பதிவு விவரங்களை தானாக ஏற்கும் நடைமுறை அறிமுகம் செய்யப்ப ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் ஜிஎஸ்டி விண்ணப்பங்களுக்கான ஒப்புதல் காலம் 15 நாட்களில் இருந்து 10 நாட்களாக குறைக்கவும், 90 சவீத ஜிஎஸ்டி கோரிக்கைகள் 3 வேலை நாட்களுக்குள் தானாக அனுமதி வழங்கவும், ஜிஎஸ்டி பதிவை ரத்து செய்வதற்கான நடைமுறையை எளிதாக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இன்றைய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல்பெற்ற அனைத்து சீர்த்திருத்தங்களும் 2027 ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+