பாப்கார்ன், ஆடைகள், பழைய கார்களுக்கான ஜிஎஸ்டி வரி உயர்கிறது! கவுன்சில் கூட்டத்தில் பரிந்துரை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பாப்கார்ன், கார்கள், ரெடிமேட் துணிகளுக்கான ஜிஎஸ்டி வரியை உயர்த்த பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. இதனால் இவற்றின் விலை அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் இன்று 55வது ஜிஎஸ்டி கவுன்சில் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை மாற்றி அமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டன. குறிப்பாக சினிமா தியேட்டர்களில் வழங்கப்படும் பேக் செய்யப்படாத பாப்கார்னுக்கு 5% வரியும், இதுவே உப்பு மற்றும் பெப்பர் போட்டு பேக் செய்யப்பட்டு லேபிளிடப்பட்ட பாப்கார்னுக்கு 12% வரியும் விதிக்க பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. இதுவே கேரமல் பாப்கார்னுக்கு 18% வரை வரி விதிக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

gst council meeting

தவிர, ஆடைகளை எடுத்துக்கொண்டால், ரூ.1000க்கும் மேல் விலை கொண்ட ஆடைகளுக்கான வரி 5%லிருந்து 12% ஆகவும், ரூ.15,000க்கும் அதிகமான விலை கொண்ட ஷுக்களுக்கு ஜிஎஸ்டி வரி 18%லிருந்து 28% ஆக உயர்த்தவும், பழைய கார்களுக்கான வரி 18% ஆக உயர்த்தவும் கவுன்சில் குழு பரிந்துரைத்துள்ளது.

பாப்கார்ன், ஷூ, ஆடை, கடிகாரங்கள், பேனாக்கள் என 128 பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை மாற்றி அமைக்க இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

வரி குறைப்பை பொறுத்த அளவில், மூத்த குடிமக்கள் சுகாதார காப்பீட்டுக்கு செலுத்தும் பிரீமியத்துக்கு வரியில் இருந்து விலக்கு அளிக்க பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. தனிநபர்களை பொறுத்த அளவில், ரூ.5 லட்சம் வரையிலான கவரேஜ் கொண்ட காப்பீட்டிற்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கவும் பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+