ஜிஎஸ்டி வரி வசூல் ரூ1.78 லட்சம் கோடி; தமிழ்நாட்டின் பங்கு ரூ. 11,017 கோடி.. 2023-ஐ விட 19% அதிகம்!
டெல்லி: நாட்டின் மார்ச் மாத ஜிஎஸ்டி வரி வசூல் ரூ1.78 லட்சம் கோடி. இது கடந்த ஆண்டை விட 11.5% அதிகம். தமிழ்நாட்டில் மார்ச் மாத ஜிஎஸ்டி வரி வசூல் ரூ11,017 கோடி; கடந்த 2023-ம் ஆண்டை விட 19% அதிகம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு தெரிவித்துள்ளதாவது: 2024 மார்ச் மாதத்தில் 1.78 லட்சம் கோடியாக இருந்தது. இது 2023ல் இதே மாதத்துடன் ஒப்பிடும் போது 11.5 சதவீதம் அதிகமாகும். இந்த வரிவசூல் இதுவரையிலான ஜிஎஸ்டி வசூலில் இரண்டாவது பெரிய தொகையாகும்.

மார்ச் மாதத்தில் வசூலான சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் விவரம் வருமாறு:
மத்திய சரக்கு மற்றும் சேவை வரி (சிஜிஎஸ்டி): ரூ.34,532 கோடி
மாநில சரக்கு மற்றும் சேவை வரி (எஸ்ஜிஎஸ்டி): ரூ.43,746 கோடி
ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி (ஐஜிஎஸ்டி): இறக்குமதி செய்யப்ட்ட பொருட்கள் மீது வசூலிக்கப்பட்ட ரூ. 40,322 கோடி உட்பட ரூ.87,947 கோடி
செஸ்: இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் மீது வசூலிக்கப்பட்ட ரூ. 996 கோடி உட்பட ரூ. 12,259 கோடி
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 2024 மார்ச் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் ரூ. 11,017 கோடியாக இருந்தது. இது கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் 19 சதவீத வளர்ச்சியாகும். கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ரூ. 9,245 கோடி வருவாய் கிடைத்தது.
புதுச்சேரியை பொறுத்தவரை மார்ச் மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.221 கோடியாக இருந்தது. இது கடந்த ஆண்டு மார்ச் மாதத்தை விட 9 சதவீதம் அதிகமாகும். கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் புதுச்சேரியில் ரூ.204 கோடி வருவாய் கிடைத்தது. இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications