ஆகஸ்ட்டில் ஜிஎஸ்டி மொத்த வருவாய் ரூ.1,43,612 கோடி; தமிழ்நாட்டில் ஜிஎஸ்டி நிலவரம் என்ன தெரியுமா?
டெல்லி: ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ1,43,612 கோடி என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் ஜிஎஸ்டி வரிகள் குறித்த சர்ச்சையும் விமர்சனங்களும் ஓயவில்லை. ஜிஎஸ்டி வரி விதிப்பு, ஜிஎஸ்டி வரி நிலுவையை தராமல் மத்திய அரசு இழுத்தடிப்பது என்பது நாட்டின் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது என்பது மாநில கட்சிகளின் கருத்து.

இந்நிலையில் நடப்பாண்டில் அதாவது 2022 ஆகஸ்ட் மாதத்தில் வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டி வருவாய் தொடர்பாக மத்திய அரசு புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.1,43,612 கோடியாகும். இதில் மத்திய ஜிஸ்டி ரூ.24,710 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ.30,951 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி (இறக்குமதி பொருட்கள் மூலம் வசூலிக்கப்பட்ட ரூ.42,067 கோடி உட்பட) ரூ.77,782 கோடி, கூடுதல் வரி (செஸ்) ரூ.10,168 கோடி (இறக்குமதி பொருட்கள் மூலம் வசூலிக்கப்பட்ட ரூ.1,018 கோடி உட்பட).
ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி-யிலிருந்து மத்திய ஜிஎஸ்டி-க்கு ரூ.29,524 கோடியையும், மாநில ஜிஎஸ்டி-க்கு ரூ.25,119 கோடியையும் அரசு வழங்கியுள்ளது. முறைப்படியான பைசலுக்கு பின், 2022 ஆகஸ்ட் மாதத்தில் மத்திய ஜிஎஸ்டி-க்கான வருவாய் ரூ.54,234 கோடியாகவும், மாநில ஜிஎஸ்டி-க்கான வருவாய் ரூ.56,070 கோடியாகவும் இருந்தது.
கடந்த ஆண்டு இதே மாதத்தில் ஜிஎஸ்டி வருவாய் ரூ.1,12,020 கோடி என இருந்த நிலையில், இந்த ஆண்டு வருவாயில் 28 சதவீதம் உயர்ந்துள்ளது. சென்ற ஆண்டு இதே காலத்தைவிட பொருட்கள் இறக்குமதி மூலமான வருவாய் 57 சதவீதமும் உள்நாட்டு பரிவர்த்தனை மூலமான வருவாய் (சேவைகள் இறக்குமதி உட்பட) 19 சதவீதமும் அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில், 2021 ஆகஸ்ட் மாதத்தில் 7,060 கோடியாக இருந்த ஜிஎஸ்டி வருவாய், 2022 ஆகஸ்ட் மாதத்தில் ரூ.8,386 கோடியாகி 19 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது. புதுச்சேரியில் 2021 ஆகஸ்ட் மாதத்தில் ரூ.156 கோடியாக இருந்த ஜிஎஸ்டி வருவாய், 2022 ஆகஸ்ட் மாதத்தில் ரூ.200 கோடியாகி 28 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி
மொத்த வருவாய் - ரூ.1,43,612 கோடி
மத்திய ஜிஎஸ்டி - ரூ 24,710 கோடி
மாநில ஜிஎஸ்டி - ரூ 30,951 கோடி
ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி - ரூ 77,782 கோடி
மத்திய ஜிஎஸ்டிக்கு - ரூ29,524 கோடி
மாநில ஜிஎஸ்டிக்கு - ரூ25,119 கோடி
தமிழகம்: ஜிஎஸ்டி- 19% வளர்ச்சி
2021 ஆகஸ்ட் ரூ7,060 கோடி
2022 ஆகஸ்ட் ரூ8,386 கோடி
புதுச்சேரி ஜிஎஸ்டி 28% வளர்ச்சி
2021 ஆகஸ்ட் ரூ156 கோடி
2022 ஆகஸ்ட் ரூ200 கோடி
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications