இரண்டு அடுக்காக குறைக்கப்பட்ட ஜிஎஸ்டி! என்ன மாற்றம்? நிர்மலா சீதாராமன் அறிவித்தது இதுதான்!
டெல்லி: ஜிஎஸ்டியை முறைப்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்திருக்கும் நிலையில் இன்று அது தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இனி ஜிஎஸ்டி இரண்டடுக்காக மட்டுமே தொடரும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருக்கிறார்.
டெல்லியில் இன்று நிர்மலா சீதாராமன் தலைமையில் 56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில், ஜஎஸ்டி வரியை எளிமைப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் செய்தியார்களை சந்தித்த நிர்மலா சீதாராமன், இனி இரண்டடுக்கு ஜஎஸ்டி வரி மட்டுமே நடைமுறையில் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

அதாவது ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டபோது அது 4 அடுக்ககளாக இருந்தது. 5, 12, 18 மற்றும் 28 என வரி இருந்தது. இனி இது 5 மற்றும் 18 என இரண்டு அடுக்காக மட்டுமே இருக்கும் என நிர்மலா சீதாராமன் அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பு செப்.22 முதல் அமலுக்கு வரும் எனவும் கூறியுள்ளார்.
இந்த மாற்றத்தை வரவேற்றிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, "சுதந்திர தின உரையின் போது, அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்களை கொண்டு வருவதற்கான எங்கள் நோக்கம் குறித்து நான் பேசியிருந்தேன். சாமானிய மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதையும் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட பரந்த அளவிலான ஜிஎஸ்டி சீர்திருத்தங்களுக்கான விரிவான திட்டத்தை மத்திய அரசு தயாரித்திருந்தது.
மத்திய அரசு மற்றும் மாநிலங்களை உள்ளடக்கிய ஜிஎஸ்டி கவுன்சில் சாமானியர்கள், விவசாயிகள், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், நடுத்தர வர்க்கத்தினர், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு பயனளிக்கும் வகையில் ஜிஎஸ்டி விகிதக் குறைப்பு மற்றும் சீர்திருத்தங்கள் குறித்து மத்திய அரசு சமர்ப்பித்த திட்டங்களுக்கு கூட்டாக ஒப்புக்கொண்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
புதிய அறிவிப்பின்படி, 12 சதவிகிதத்தில் இருந்த பொருட்கள் 5 சதவிகிதத்திற்கும், 28 சதவிகிதத்திலிருந்த பொருட்கள் 18 சதவிகிதத்திற்கும் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இதனால். சமானிய மக்கள் பெரிய அளவில் பலன் பெறுவார்கள் என்று பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர். இந்த புதிய மாற்றத்தின்படி கல்வி பொருட்களுக்கான ஜிஎஸ்டி ரத்து செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல, காப்பீடுக்கான ஜிஎஸ்டியும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications