அமுல் பால் விலை அதிரடி உயர்வு.. தேர்தல் முடிந்ததும் அடுத்தடுத்து ஷாக் கொடுக்கும் குஜராத் பாஜக அரசு
அகமதாபாத்: குஜராத்தின் அமுல் பாலின் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இன்று முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வரும் என்று குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு கூறியுள்ளது. தேர்தல் முடிந்த கையோடு பால் விலை உயர்த்தப்பட்டு இருப்பது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லோக்சபா தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில் நாடு முழுவதும் சுங்கச் சாவடிகளில் கட்டணம் இன்று நள்ளிரவு முதல் உயர்ந்துள்ளது. தேர்தல் முடிந்ததும் சுங்க கட்டணத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளது என்று வாகன ஓட்டிகள் சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தான் குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பின்கீழ் செயல்பட்டு வரும் அமுல் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு (GCMMF) வெளியிட்ட அறிக்கையில் அரை லிட்டருக்கு ரூ.1 உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமுல் கோல்டு, அமுல் சக்தி, அமுல் டீ ஸ்பெஷல் மில்க் என அனைத்து அமுல் பால் வேரியண்ட்களும் லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது.

உயர்த்தப்பட்ட புதிய விலையின் படி அமுல் கோல்டு பால் ஒரு லிட்டர் 64 ல் இருந்து 66 ஆக உயர்ந்துள்ளது. அமுல் டீ ஸ்பெஷல் பால் விலை தற்போது 64 ஆக உயர்ந்துள்ளது. தயிர் விலையும் உயர்ந்துள்ளது. முன்னதாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அமுல் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட்டது.
உற்பத்தி விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகளுக்கு செலவை ஈடுகட்டும் விதமாக பால் விலை உயர்த்தப்பட்டு இருப்பதாக குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. குஜராத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.
பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் லோக்சபா தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெறும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் கூறியுள்ளன. தேர்தல் முடிந்த கையோடு அமுல் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட்டதை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications