பாலம் விபத்துக்கள்.. குஜராத்துக்கு அவார்டே கொடுக்கலாம் போல! கடந்த 10 ஆண்டுகளில் இத்தனை பலியா!
காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் சமீபத்தில் நடந்த பாலம் விபத்து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் இம்மாநிலத்தில் ஏராளமான பாலங்களில் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டிருக்கிறது. தொடர் பாலம் விபத்துகள், பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன.
நேற்று காலை குஜராத்தின் வதோதரா மாவட்டத்தில் மஹிசாகர் ஆற்றின் மேல் கட்டப்பட்டிருந்த பாலம் இடிந்து விழுந்திருக்கிறது. இந்த விபத்தில், 13 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

குஜராத்தில் பாலம் விபத்துக்கள் நடப்பது இது முதல்முறை கிடையாது. இதற்கு முன்னர் ஏராளமான பாலங்கள் விபத்தில் சிக்கியுள்ளன. எனவே, பாலத்தின் தரம், பாலம் கட்டுமானம் குறித்து மக்கள் கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளனர். கடந்த 10 ஆண்டுகளாக குஜராத்தில் நடந்த பல விபத்துக்கள் பின்வருமாறு.
சூரத் கேபிள் பாலம் விபத்து
கடந்த 2014ம் ஆண்டு, அத்வாலைன்ஸ் பகுதியிலிருந்து தபி ஆற்றின் மீது கட்டப்பட்ட கேபிள் பாலத்தின் அணுகுசாலை கட்டுமானத்தின்போது விபத்து ஏற்பட்டது. ஜூன்.10ம் தேதி இந்த விபத்து நடந்தது. இது கட்டி முடிக்கப்படவில்லை. முன்னதாகவே விழுந்து விபத்தில் சிக்கியது. கட்டுமானப் பணியின் போது, 35 மீட்டர் நீளமுள்ள ஒரு கான்கிரீட் ஸ்லாப், சுமார் 40 அடி உயரத்தில் இருந்து திடீரென இடிந்து விழுந்தது.
இந்த விபத்தில் 10 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 16 பேர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். அவர்கள் நீண்ட போராட்டத்திற்கு பின்னர் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
ஜூனாகத் பாலம் விபத்து
இந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. ஆனால் மக்கள் படுகாயமடைந்தனர். இந்த பாலம், ஜூனாகத் மாவட்டத்தில் உள்ள மலாங்கா கிராமத்தை மென்டார்டா-சாசன் சாலையுடன் இணைக்கிறது. கனமழை காணரமாக இந்த பாலம் இடிந்து விழுந்தது. பாலத்தின் நடுப்பகுதி சிதைந்து ஒரு பெரிய இடைவெளியை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் பல வாகனங்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி சேதமடைந்தன. இந்த விபத்தில் மொத்தம் 12 பேர் காயமடைந்தனர்.
அகமதாபாத் ஹட்கேஷ்வர் பாலம்
இந்த பாலம் இடிந்து விழவில்லை. மாறாக விரிசல் காரணமாக முன்கூட்டியே உஷார் செய்யப்பட்டு, போக்குவரத்து நிறத்தப்பட்டது. 2015ல் இந்த பாலம் கட்ட தொடங்கப்பட்டது. 2017ல் ரூ.40 கோடி செலவில் பாலம் கட்டி முடிக்கப்பட்டது. பாலம் அடுத்த 100 ஆண்டுகளுக்கு தாங்கும் என்று சொல்லப்பட்டது. ஆனால், அடுத்த 4 ஆண்டுகளில், அதாவது 2021ல் பாலம் விரிசல் விட தொடங்கியது.

அகமதாபாத் மும்டாபுரா மேம்பாலம் விபத்து
அகமதாபாத்தில் உள்ள SP ரிங் ரோட்டில் தெற்கு போபால் அருகே உள்ள மும்டாபுரா பகுதியில் இந்த பாலம் கடந்த 2021ம் ஆண்டு கட்டப்பட்டுக்கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது. பாலம் ஓரிரு வாரங்களில் திறக்கபபட் இருந்த நேரத்தில் இந்த விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக யாரும் உயிரிழக்கவில்லை. ஆனால், சில தொழிலாளர்கள் காயமடைந்தனர்.
மோர்பி பாலம் விபத்து 2022
இந்த விபத்துதான் குஜராத் வரலாற்றிலேயே மிக மோசமான விபத்தாக பார்க்கப்படுகிறது. 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் 30ம் தேதி இந்த விபத்து நடந்தது. மோர்பி நகரில் உள்ள மச்சு நதியின் மீது கட்டப்பட்டிருந்த தொங்கு நடை மேம்பாலம் அறுந்த ஆற்றில் விழுந்தது. இந்த விபத்தில் மொத்தம் 141 பேர் பலியாகினர். 100 ஆண்டுகள் பழமையான இந்த பாலம் புதுப்பிக்கப்பட்டு மக்கள் பார்வைக்கு திறக்கப்பட்ட வெறும் 4 நாட்களில் அறுந்து விழுந்தது.
இதனை தொடர்ந்து, 2023ல் மிந்தோலா ஆறு பாலத்தில் ஏற்பட்ட விரிசல் அதனை தொடர்ந்து நேற்று வதோதராவில் நடந்த விபத்து ஆகியவை கட்டுமானங்கள் தொடர்பான கேள்வியை எழுப்பியுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications