குர்கானிலும் கால் வைத்த கொரோனா வைரஸ்.. பேடிஎம் ஊழியருக்கு சிகிச்சை.. 2 நாள் அலுவலகம் மூடல்
டெல்லி: டெல்லியை அடுத்த குர்கான் நகருக்கும் கொரோனா வைரஸ் வந்தடைந்துள்ளது. அங்கு உள்ள பேடிஎம் நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து இரண்டு நாட்களுக்கு பேடிஎம் அலுவலகம் மூடப்பட்டுள்ளது.
Recommended Video
உலகம் முழுக்க கொரோனா, வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் இதுவரை 28 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரசால் மிகவும் பாதிப்படைந்த ஒரு நாடு இத்தாலி. இந்த நாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்த குர்கான் நகரை சேர்ந்த பேடிஎம் நிறுவன ஊழியர் ஒருவர், தாயகம் திரும்பிய நிலையில் அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதுதொடர்பாக பேடிஎம் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்கள் நிறுவன ஊழியருக்கு வைரஸ் பாதிப்பு இருந்ததால் நகரில் உள்ள அலுவலகம் இரண்டு நாட்கள் மூடப்படுவதாகவும், அங்கு கிருமிநாசினி தெளிப்பு உள்ளிட்ட சுத்தப்படுத்தும் பணிகள் நடக்கும் என்றும், அதுவரை ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அலுவலகத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்கு, இத்தாலியில் இருந்து வந்தவரிடமிருந்து நோய் வர வாய்ப்பு இருப்பதால், அவர்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. இதன் மூலம், இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபர் எண்ணிக்கை 29ஆக உயர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications