நாட்டின் புதிய தலைமை தேர்தல் ஆணையர் இவர்தான்! அறிவிப்பு வெளியானது!
டெல்லி: தற்போது தலைமை தேர்தல் ஆணையராக இருக்கும் ராஜீவ் குமாரின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில் புதிய ஆணையராக ஞானேஷ்குமார் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
ஜம்மு காஷ்மீரில் சிறப்பு சட்டப்பிரிவு 370-ஐ நீக்கம் செய்வது தொடர்பான மசோதாவை வரைவு செய்ததில் ஞானேஷ்குமார் முக்கிய பங்காற்றியுள்ளார்.

140 கோடி மக்களுடன் இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடாக இருக்கிறது. இந்த அந்தஸ்தை மேலும் சிறப்படைய செய்வது தேர்தல்கள்தான். எனவே இந்தியாவுக்கு தேர்தல்கள் மிக முக்கியமானவை. இந்த தேர்தல்களை, இந்திய தேர்தல் ஆணையம் நடத்துகிறது. இதன் ஆணையராக 3 பேர் இருப்பார்கள். ஆனால் மத்திய அரசு பழைய சட்டத்தை மாற்றி புதிய சட்டத்தை கொண்டு வந்தது. அதன்படி, தலைமை தேர்தல் ஆணையர் பதவிக்கு ஆணையர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதனை பிரதமர் தலைமையிலான குழுதான் தேர்வு செய்யும். குழுவில் பிரதமரும், மத்திய அமைச்சர் ஒருவரும், எதிர்க்கட்சி தலைவரும் இருப்பார்கள். அந்த வகையில் மோடி, அமித்ஷா மற்றும் ராகுல் காந்தி அடங்கிய குழு நேற்று கூடியது. தற்போது உள்ள தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாரின் பதவிக்காலம் பிப்.18ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, புதிய ஆணையரை தேர்ந்தெடுக்க குழு கூடியது. யார் அடுத்த தலைமை தேர்தல் ஆணையர் என்பது நேற்று தேர்வு செய்யப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில் குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி ராஜீவ் குமாருக்கு அடுத்தபடியாக மூத்தவராக இருக்கும் ஞானேஷ் குமார்தான் தலைமை தேர்தல் ஆணையராக தொடர்வார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இவர் பிப்.19ம் தேதி முதல் தனது பதவியில் தொடர்வார் என்றும் குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து வெளியான செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல 1989ம் ஆண்டு ஐஏஎஸ் பேட்சை சேர்ந்த விவேக் ஜோஷி தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications