Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பேரதிர்ச்சி.. 11 கோடி பேரின் ஆதார் தகவல் லீக் - பிரதமர் கிசான் இணையதளத்தில் திருடிய ஹேக்கர்கள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிரதமர் கிசான் இணையதளத்தில் இருந்து 11 கோடி விவசாயிகளின் ஆதார் தகவல் கசிந்திருப்பது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் ஆதார் அட்டையை வைத்து பதவி செய்தவர்களுக்கு ஆண்டுதோறும் வங்கிக் கணக்கு மூலம் ரூ.6,000 நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தில் இணையவும் விபரங்கள் அறியவும் உதவும் வகையில் பிம் கிசான் என்ற இணையதளமும் இயங்கி வருகிறது.

11 கோடி விவசாயிகள்

11 கோடி விவசாயிகள்

அதில் சென்று விவசாயிகள் ஆதார் விபரங்களை வழங்கினால் தங்களின் கடன் விபரங்களை அறிந்துகொள்ள முடியும். இப்படி 11 கோடி விவசாயிகளின் ஆதார் தகவல்களில் அந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளன. இந்த நிலையில் 11 கோடி விவசாயிகளின் ஆதார் தகவல்களும் திருடப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அதுல் நாயர்

அதுல் நாயர்

பிரதமர் கிசான் இணையதளத்தில் இருந்தே இந்த தகவல்கள் கசிந்துள்ளது என பாதுகாப்பு பிரிவு ஆராய்ச்சியாளர் அதுல் நாயர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கூறிய அவர், "பிரதமர் கிசான் இணையதளத்தில் பல்வேறு விபரங்களையும் தரவுகளை பார்க்க முடியும். அதில் சென்று விவசாயிகள் மாநிலங்கள், மாவட்டங்கள், கிராமங்கள் பற்றி தெரிந்துகொள்ளலாம்.

ஹேக்கர்கள் கைவரிசை

ஹேக்கர்கள் கைவரிசை

இந்த இணையதளத்தில் 11 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பிரதமர் நிதியுதவி திட்டத்திற்காக பதிவு செய்து இருக்கின்றனர். ஹேக்கர்கள் இணையதளத்தில் ஊடுருவி 11 கோடி விவசாயிகளின் ஆதார் தகவல்களை திருடியுள்ளனர். இந்த விபரத்தை கடந்த மாதம் அறிந்த நான் இந்திய கணினி அவசர தீர்வுக்குழுவிற்கு தகவல் வழங்கிவிட்டேன். இந்த பிரச்சனைக்கு கடந்த மாதம் தீர்வு கிடைத்தது." என்றார்.

தொடரும் தகவல் கசிவு

தொடரும் தகவல் கசிவு

இதற்கு முன்பாக கடந்த ஜனவரி மாதமும் பலரது ஆதார் தகவல் கசிந்ததை அதுல் நாயர் கண்டறிந்தார். இந்திய மக்களின் முதன்மை ஆவணமாக கருதப்படும் ஆதாரின் பாதுகாப்பு குறித்து பலரும் தங்கள் கவலைகளை தெரிவித்து வந்துள்ளனர். கடந்த 2019 ஆம் ஆண்டுகூட இண்டேன் எரிவாயு நிறுவனம் வாடிக்கையாளர் விபரங்களை டீலர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு வெளியிட்டது சர்ச்சையானது கவனிக்கத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+