இஸ்ரேல் மீதான ஹமாஸ் ஜிஹாதிகள் யுத்தம்.. ஆமா அரபு நாடுகள் , ஆயுத குழுக்கள் என்ன சொல்கிறது தெரியுமா?
டெல்லி: இஸ்ரேல் மீதான ஹமாஸ் பாலஸ்தீன ஜிஹாதிகளின் போர் குறித்து அரபுநாடுகள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றன.
இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையேயான யுத்தம் குறித்த அரபு நாடுகளின் கருத்துகள்:

செளதி அரேபியா: பாலஸ்தீனிய ஆயுதக் குழுக்கள்- இஸ்ரேலிய ராணுவம் இடையிலான மோதல்களை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். இரு தரப்பினருக்கும் இடையிலான யுத்தம் மேலும் விரிவடையாமல் தடுக்கப்பட வேண்டும். சர்வதேச சமூகம் தன் பொறுப்புகளை நிறைவேற்றி, பிராந்தியத்தில் பாதுகாப்பு மற்றும் அமைதியை உருவாக்க வேண்டும்.
கத்தார்: அல் அக்ஸா மசூதி மீதான பாலஸ்தீனியர்களின் உரிமைகளை இஸ்ரேல் இடைவிடாமல் ஒடுக்கியதுதான் தற்போதைய மோதலின் மையம். இஸ்ரேலியர்களின் பாதுகாப்பு என்ற பெயரில் இஸ்ரேல் ராணுவம் மேற்கொண்ட அடக்குமுறைதான் இந்த போருக்கும் காரணம். காஸா முனையின் நிகழ்வுகள் பெரும் துயரத்தை தருகின்றன. சர்வதேச விதிகளை மீறும் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் தடுத்து நிறுத்த வேண்டும்.
ஐக்கிய அரபு அமீரகம்: யுத்தம் நிகழ்ந்து கொண்டிருக்கும் பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட சர்வதேச சமூகம் முன்வரவேண்டும். அனைத்து தரப்பும் வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வந்து அமைதியை ஏற்படுத்த வேண்டும்.
குவைத்: இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையேயான யுத்தம் பெருங்கவலையைத் தருகிறது. குடியேற்ற விரிவாக்கங்கள் உள்ளிட்டவைகளை சர்வதேச சமூகம் தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும். இஸ்ரேலின் பொதுமக்கள் மீதான கண்மூடித்தனமான தாக்குதல்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும்.
ஓமன்: இஸ்ரேலும் பாலஸ்தீன ஹமாஸ் இயக்கமும் போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். இதில் சர்வதேச சமூகம் உடனடியாக தலையிட வேண்டும்.
எகிப்து: இஸ்ரேல்- பாலஸ்தீன யுத்தமான மோசமான எதிர்விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். இருதரப்பும் பொதுமக்கள் மீதான தாக்குதல்களை நிறுத்தி உயிரிழப்புகளைத் தடுக்க வேண்டும்.
மொராக்கோ: காஸா பகுதி மீதான ராணுவ நடவடிக்கை கண்டனத்துக்குரியது. இருதரப்பும் அமைதியை கடைபிடிக்க வேண்டும். பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் கடும் கண்டனத்துக்குரியது.
லெபனான் ஹிஸ்புல்லா: ஹமாஸ் பாலஸ்தீனர்கள் நடவடிக்கை வீரதீரமானது. பாலஸ்தீன மக்களுக்கு ஹிஸ்புல்லா இயக்கம் பாராட்டுகளையும் வாழ்த்த்களையும் தெரிவிக்கிறது.
சிரியா: இஸ்ரேலின் ஜியோனிச பயங்கரவாதத்துக்கு எதிரான பால்ஸ்தீன மக்களின் இந்தப் போராட்டத்தை சிரியா ஆதரிக்கிறது. பாலஸ்தீனர்கள் தங்களது உரிமைக்கான போராட்டங்களை நடத்துகின்றனர். ஆகையால் பாலஸ்தீனர்களை சிரியா ஆதரிக்கிறது.
ஏமன்: ஹமாஸ் ஜிஹாதிகளின் ராணுவ நடவடிக்கையை ஹெளத்தி கிளர்ச்சி குழு ஆதரிக்கிறது. பாதுகாப்புக்காகவும் கண்ணியத்துக்காகவும் அமைதிக்காகவும் ஹமாஸ் இயக்கம் இந்த ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதை ஆதரிக்கிறோம் என்கிறது ஹெளத்தி குழு. ஏமன் தலைநகர் சானா, ஹெளத்தி கட்டுப்பாட்டில் இருக்கிறது. இக்குழுவின் பின்னணியில் ஈரான் ஆதரவு உள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications