டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வாகன ஓட்டிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. சுங்கச்சாவடிகளில் வரப்போகுது புதிய நடைமுறை .. என்னனு தெரியுமா?

Google Oneindia Tamil News

டெல்லி: நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் குறிப்பிட்ட தூரத்துக்கு மேல் காத்திருக்கும் வாகனங்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை என்ற புதிய நடைமுறை விரைவில் வருகிறது.

உங்களை பார்த்தாலே தெறித்து ஓடும் முன்னணி நடிகைகள்.. விஷால் மீது காயத்ரி ரகுராம் பாலியல் புகார் உங்களை பார்த்தாலே தெறித்து ஓடும் முன்னணி நடிகைகள்.. விஷால் மீது காயத்ரி ரகுராம் பாலியல் புகார்

இந்தியா முழுவதும் நெடுஞ்சாலைகளில் நான்கு சக்கர வாகன ஓட்டிகளுக்கு பெரும் தலைவலியாக அமைந்து இருப்பது சுங்கச் சாவடிகள்தான்.

 சுங்கச்சாவடி சோதனை

சுங்கச்சாவடி சோதனை

குறிப்பாக திருநெல்வேலியில் இருந்து சென்னை சென்றால் இடையில் இருக்கும் பல சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்திவிட்டுதான் பயணத்தை தொடர முடியும். வாகன ஓட்டிகளுக்கு சுங்கச்சாவடி கட்டணம் ஒரு தொல்லை என்றால் அந்த பணம் கட்டுவதற்காக சுங்கச்சாவடிகளில் காத்திருப்பது பெரும் சோதனையாக இருந்தது.

முடிவு கட்டிய மத்திய அரசு

முடிவு கட்டிய மத்திய அரசு

அதுவும் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் வாகனங்கள் சொந்த ஊருக்கு படையெடுத்து செல்வதால் சுங்கச்சாவடிகளில் பல மணி நேரம் காத்திருந்து ஊருக்கு செல்வதற்கு போதும், போதும் என்றாகிவிடும். ஒருவழியாக இந்த நீண்ட காத்திருப்புக்கு மத்திய அரசு முடிவு கட்டியது. அதாவது சுங்கச்சாவடிகளில் நேரடியாக கட்டணம் செலுத்தாமல் பாஸ்டேக் முறையில் ஆன்லைனில் கட்டணம் செலுத்தும் முறையை மத்திய அரசு கொண்டு வந்தது.

 பாஸ்டேக் முறை

பாஸ்டேக் முறை

இதன்மூலம் சுங்கச்சாவடிகள் முன்பு வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருப்பது தவிர்க்கப்பட்டது. தற்போது நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளில் பாஸ்டேக் முறையே கடைபிடிக்கப்படுகிறது. இந்த பாஸ்டேக் முறையிலும் பணம் செலுத்த வாகனங்கள் சிறிது நேரம் காத்திருக்கும் நிலையையும் மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

புதிய நெறிமுறைகள்

புதிய நெறிமுறைகள்

இது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:- நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் 'பாஸ்ட் டேக்' முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் சுங்கச்சாவடிகளில் காகிதமில்லா பணப்பரிவர்த்தனை அதிகரித்துள்ளது. அதே வேளையில் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் காத்திருக்கும் நேரத்தை குறைக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளன.

கட்டணம் செலுத்த வேண்டாம்

கட்டணம் செலுத்த வேண்டாம்

இந்த புதிய விதியின்படி சுங்கச்சாவடிகளில் பணம் செலுத்தும் இடத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவினை குறிக்கும் வகையில் மஞ்சள் நிற கோடு ஒன்று வரையப்படும். இந்த கோட்டினை தாண்டி வாகனங்கள் வரிசையில் நின்று கொண்டிருந்தால் அந்த குறிப்பிட்ட வாகனங்கள் அனைத்தும் கட்டணம் செலுத்தாமல் சுங்கச்சாவடிகளை கடந்து செல்லலாம். சுங்கச்சாவடிகளில் பணம் செலுத்தும் இடத்தில் 10 வினாடிகளுக்கு மேல் ஒரு வாகனம் நிற்க கூடாது என்பதற்காக இந்த புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன. இந்த விதிகள் விரைவில் நடைமுறைக்கு வரும் என்று அந்த அதிகாரி கூறினார்.

English summary
The new practice of no longer having to pay for vehicles waiting over a certain distance at customs across the country is coming soon
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X