Hardik Pandya: பாசம் ஒருநாளும் மாறாதம்மா! முன்னாள் மனைவி, மகனுக்காக ஹர்திக் பாண்ட்யா செய்த காரியம்!
டெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா, அண்மையில் மஹிகா சர்மாவின் 25 வது பிறந்த நாளில் அவருடன் நெருக்கமாக இருப்பதை போன்ற ஒரு வீடியோவை பகிர்ந்து இருந்தார். இந்த வீடியோ வெளியிட்ட சில நாட்களில் தற்போது முன்னாள் மனைவி, மகனுக்காக ஹர்திக் பாண்ட்யா செய்த காரியம் இணையத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவர் ஹர்திக் பாண்ட்யா. அதிரடி பேட்டிங் மற்றும் சிறப்பான பந்து வீச்சு என கிரிக்கெட்டில் ஆல்ரவுண்டராக கலக்கி வரும் ஹர்திக் பாண்ட்யா தனது மனைவியிடம் இருந்து பிரிந்து வாழ்த்து வருகிறார்.

மனைவியுடன் விவாகரத்து
கடந்த 2024 ஆம் ஆண்டு ஹர்திக் பாண்ட்யாவுக்கும், நடசா ஸ்டன்கோவிக்கிற்கும் இடையே திருமணம் நடைபெற்றது. இந்த ஜோடிக்கு அகஸ்த்யா என்ற மகன் உள்ள நிலையில், 2024 ஆம் ஆண்டு ஹர்திக் பாண்ட்யா - நடாசா ஸ்டன்கோவிக் ஜோடி இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் விவகாரத்து பெற்று தனியாக வாழ்ந்து வருகிறார்கள்.
மகன் அகஸ்த்யாவை தாய் நடசா தனது பராமரிப்பில் வளர்த்து வருகிறார். மனைவியுடன் இருந்து பிரிந்தாலும் தந்தையாக தனது கடமையை செய்வதை ஹர்திக் பாண்ட்யா தவறுவது இல்லை. இந்த நிலையில்தான், ரூ.4 கோடி மதிப்புள்ள எஸ்யூவி ரக லேண்ட்ரோவர் டிஃபெண்டர் காரை தனது மகனுக்கு ஹர்திக் பாண்ட்யாவுக்கு பரிசளித்துள்ளார்.
கார் வாங்குவது போன்ற வீடியோ
ஹர்திக் பாண்ட்யாவின் இந்த செயல் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. லேண்ட் ரோவர் காரை விற்பனை செய்த ஷோரூம் வெளியிட்ட பதிவுதான் ரசிகர்களிடையே வைரல் ஆகி வருகிறது. பாண்ட்யாவின் 5-வயது மகன் மற்றும் முன்னாள் மனைவி காரை வாங்குவது போன்ற வீடியோவை பகிர்ந்துள்ளது.
கடந்த 2024 ஆம் ஆண்டு இருவரும் பிரிந்த போதும், தங்கள் மகனுக்காக முதிர்ச்சியுடன் நடந்து கொள்வதை நெட்டிசன்கள் பாரட்டி வரும் நிலையில் ஹர்திக் பாண்ட்யாவின் இந்த செயல் நெட்டிசன்களிடையே பாரட்டை பெற்று வருகிறது. விவகாரத்து பெற்று இரண்டு ஆண்டுகள் ஆனாலும் தங்கள் மகனுக்காக பொறுப்புகளை இருவரும் இணைந்தே மேற்கொண்டு வருகிறார்கள்.
மகனுக்காக ஹர்திக் பாண்ட்யா பரிசு
ஹர்திக் பாண்ட்யா மஹிகா சர்மா என்பவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக சமீப காலமாக செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனாலும் தனது மகன் அகஸ்த்யாவிற்கான கடமைகளை தவறாமல் செய்து வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். ஹர்திக் பாண்ட்யா, அண்மையில் மஹிகா சர்மாவின் 25 வது பிறந்த நாளில் அவருடன் நெருக்கமாக இருப்பதை போன்ற ஒரு வீடியோவை பகிர்ந்து இருந்தார்.
இந்த வீடியோ வெளியிட்ட சில நாட்களில் தற்போது தனது மகனுக்கு ஆடம்பர சொகுசு காரை வாங்கி பரிசளித்து இருக்கிறார். ஹர்திக் பாண்ட்யாவின் முன்னாள் மனைவி நடாசாவும் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் காதல் செய்ய தயாராக இருக்கிறேன் எனவும் சவால்கள் என்னை மேலும் வலிமையானதாக்கியதாகவும் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications