அரியானா மனைவியின் டான்ஸ் கண்டு ஆடிப்போன கணவன்.. இரவு 2.30க்கு பைக்கில் "அதை" உட்கார வைத்து.. ஆண்டவா
டெல்லி: மனைவிமார்கள் சிலர், ரீல்ஸ் மோகத்துக்கு ஆளாகிவிடுகிறார்கள்.. இதனால் குடும்பத்தில் பல சிக்கல்களையும், தொல்லைகளையும் சம்பந்தப்பட்டவர்கள் சந்திக்க நேரிடுகிறது. அந்தவகையில், ஹரியானாவில் ஒரு பெண், ரீல்ஸ் வீடியோவுக்கு அடிமையாகியிருக்கிறார்.. சொந்தமாக யூடியூப் சேனல் வைத்துள்ள இந்த பெண், குறுகிய காலத்தில் அம்மாநிலத்தில் பிரபலமானவர்.. அவரது தற்போதைய நிலைமை என்ன தெரியுமா? என்ன நடந்தது?
பொதுமக்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த சோஷியல் மீடியாக்களை பயன்படுத்தி வருகிறார்கள்.. குறிப்பாக ரீல்ஸ் வீடியோக்கள் பதிவிடுவது பொழுதுபோக்காக மாறியிருக்கிறது.

விதவிதமான ரீல்ஸ் போடுவதால், முடங்கி போய் நான்கு சுவற்றுக்குள் கிடந்த பல எளிய மக்களின் திறமைகள் வெளிவர துவங்கியிருக்கின்றன. பலரது திறமைகள் ரசிக்கும்படியாகவும், வியக்கும்படியாகவும் இருக்கிறது.. வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்த பல பெண்களுக்கு, இந்த ரீல்ஸ் போடுவதால் அடையாளமும், அங்கீகாரமும் கிடைப்பது வரவேற்கத்தக்க விஷயமே.
எனினும், ரீல்ஸ் மோகம் கட்டுக்கடங்காமல் சென்றுவிடும்போது, சில குடும்ப உறவுகள் பிரிய நேரிடுகிறது.. தற்கொலை, கொலை என உயிரிழப்புகளையும் சந்திக்க நேரிடுகின்றன.. எனவேதான், காவல்துறை இதுபோன்ற ஆபத்தான மற்றும் அபத்தான செயல்பாடுகளுக்கு, கடிவாளத்தை போட வேண்டும் என்ற கோரிக்கைகளை சமூக ஆர்வலர்களும் எழுப்பிக் கொண்டேயிருக்கிறார்கள்.
ரீல்ஸ் மோகம்
இந்நிலையில், ஹரியானா மாநிலத்தில் ஒரு கொடுமை நடந்துள்ளது.. ஹிசார் மாவட்டத்தை சேர்ந்த பெண் யூடியூபர் ரவீனா.. இவருக்கு 32 வயதாகிறது.. இவரது கணவர் பெயர் பிரவீன்..
இன்ஸ்டாகிராமில் எப்போதுமே ஆக்டிவ்வாக செயல்பட்டு வந்துள்ளார் ரவீனா.. இதனால் அடிக்கடி வீடியோக்களை பதிவிட்டு வந்தார்.. அதிலும் ரவீனாவின் டான்ஸ் வீடியோக்களுக்கு ரசிகர்கள் அதிகமானர்கள்.. இதையடுத்து, இன்ஸ்டாகிராம் மூலம் சுரேஷ் என்ற நபருடன் ரவீனாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.. பிறகு இருவரும் சேர்ந்து குறும்படங்களை எடுத்தனர்.
கணவரின் தொடர் அறிவுரைகள்
ஹரியானாவின் பிரேம்நகரில் இவர்கள் இருவரும் எடுத்த வீடியோக்கள், மக்களிடம் மிகவும் பிரபலமடைந்தன.. இதனால் அடிக்கடி வீடியோக்களை பதிவிட்டனர்.. சுரேஷூடன் சேர்ந்து ரவீனா வீடியோ பதிவிடுவது, கணவர் பிரவீனுக்கு பிடிக்கவில்லை.. மேலும் இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிடுவதையும் கண்டித்தார்.. பெற்றோர்களும் ரவீனாவின் செயலுக்கு எதிர்ப்பு சொன்னார்கள். ஆனாலும், ரவீனாவும், சுரேஷூம் வீடியோக்களை வெளியிடுவதை நிறுத்தவில்லை.
குறும்படங்கள் மற்றும் டான்ஸ் ரீல்ஸ்களால் இன்ஸ்டாகிராமில் 34,000 பேர் ரவீனாவை பின்தொடர்ந்தனர் இதனால், ரவீனாவின் யூடியூப்பில் வெளியாகும் சீரியல்களில் மற்ற நடிகர்களும் இடம்பெற்றனர். எனவே, யூடியூப் மட்டுமே ரவீனாவின் முழு நேர பணியானது.. இதனால், கணவரின் அறிவுரையை ரவீனா ஏற்கவில்லை.. இப்படிப்பட்ட சூழலில், கடந்த மார்ச் 25ம்தேதி, ரவீனா சுரேஷுடன் உல்லாசமாக இருப்பதை பிரவீன் நேரடியாக பார்த்து அதிர்ச்சியடைந்தார்... இதனால் தம்பதியிடம் மீண்டும் தகராறு வெடித்தது.
டான்ஸ் வீடியோக்கள்
ரவீனா நடனமாடி வீடியோக்களை பதிவிடுவதாக மட்டுமே சுரேஷ் இத்தனை காலம் நினைத்திருந்தார்.. ஆனால், மனைவி தனக்கு துரோகம் செய்தது தெரிந்ததுமே கொந்தளித்து போனார்..
இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில், ரவீனாவும் சுரேஷும் சேர்ந்து துப்பட்டாவால் பிரவீனின் கழுத்தை நெரித்தனர்.. இதில் பிரவீன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பிறகு சடலத்தை மறைக்க இருவரும் முடிவு செய்தார்கள். இதற்காக விடிகாலை 2.30 மணிக்கு சடலத்தை பைக்கில் வைத்துக் கொண்டு கிளம்பினார்கள்.. சுரேஷ் பைக்கை ஓட்ட, பிரவீனின் உடலை பைக்கில் நடுவில் வைத்து பிடித்து, ரவீனா உட்கார்ந்து கொண்டார்.. இறுதியில் ரவீனா வீட்டிலிருந்து 6 கி.மீட்டர் தொலைவிலுள்ள தின்னோட் சாலையிலுள்ள கால்வாயில் சடலத்தை வீசி எறிந்துவிட்டனர்.
மிதந்து வந்த சடலம்
இதனிடையே பிரவீன் வீட்டில் இல்லாமல் போனது குடும்பத்தினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.. இதுகுறித்து ரவீனாவிடம் கேட்டபோது, தனக்கு எதுவும் தெரியாது என்று சொன்னார்.. பிறகு குடும்பத்தினர் போலீசில் புகார் தந்துள்ளனர்..
அப்போதுதான், கால்வாயில் உடல் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. அந்த பகுதியிலுள்ள சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்தபோது, ரவீனா மற்றும் சுரேஷ் இருவரும் பிரவீன் உடலை பைக்கில் கொண்டு செல்வது பதிவாகியிருந்தது. இதற்கு பிறகுதான், ரவீனாவிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.. தற்போது போலீசார் ரவீனாவை கைது செய்தனர். ஆனால், சுரேஷ் தப்பியோடி விட்டதால் அவரை தேடி வருகிறார்கள். பிரபல யூடியூபர் என்று பெயரெடுத்த ரவீனாவின் இந்த செயலை கண்டு அவரது ஆயிரமாயிரம் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளார்களாம்.












Click it and Unblock the Notifications