மேற்கு வங்கத்தில் அடித்த அலாரம்! அதிரடி ஆர்டர் போட்ட மத்திய சுகாதாரத்துறை! நிம்மதியில் மருத்துவர்கள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மேற்கு வங்கத்தில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் 6 மணி நேரத்திற்குள் முதல் தகவல் அறிக்கை பதியப்பட வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில், ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் கடந்த 9ம் தேதி பெண் பயிற்சி மருத்துவரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கிய காவல்துறை, மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார் என்று கூறினர்.

kolkata West Bengal Central Health Department

இது மேற்கு வங்கம் மட்டுமல்லாது நாடு முழுவதும் உள்ள மருத்துவர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேற்கு வங்கத்தில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள், உயிரிழந்த சக மருத்துவருக்காக நீதி கேட்டு போராடி வருகின்றனர். கடந்த 6 நாட்களாக நடந்து வரும் போராட்டம் காரணமாக மேற்கு வங்கத்தின் மருத்துவத்துறை முற்றிலுமாக முடங்கியுள்ளது. அவசர சிகிச்சை பிரிவை தவிர வேறு எந்த பணியிலும் ஈடுபடமாட்டோம் என்று மருத்துவர்கள் ஸ்டிரைக் செய்து வருகின்றனர்.

வழக்கை தொடக்கத்தில் மேற்கு வங்க போலீசார் விசாரித்து வந்த நிலையில், வழக்கு நியாயமாக விசாரிக்கப்பட வேண்டும் என்று, உயிரிழந்த மருத்துவரின் பெற்றோர் நீதிமன்றத்தில் அம்மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இதனையடுத்து விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. இதுவரை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 5 பேருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.

இருப்பினும் இந்த வழக்கில் உண்மையான குற்றவாளி இதுவரை கைது செய்யப்படவில்லை என்று கூறி மருத்துவர்களும், மருத்துவ மாணவர்களும் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். போராட்டம் காரணமாக மேற்கு வங்கத்தில் மருத்துவ சேவை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. போராட்டம் தொடங்கிய 5 நாட்களில் நோயாளிகளில் 3 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

இப்படி இருக்கையில் கொல்கத்தா சம்பவத்தை கண்டித்து நாளை நாடு முழுவதும் வேலை நிறுத்தம் நடத்தப்போவதாக மருத்துவர்கள் அறிவித்திருக்கிறார்கள். பல்வேறு மருத்துவ சங்கங்களும், இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றன.

இந்நிலையில், மருத்துவர்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டால் 6 மணி நேரத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

அதாவது, “சமீபத்தில் அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் பிற சுகாதாரப் பணியாளர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளன. சுகாதாரப் பணியாளர்கள் பணியின் போது அச்சுறுத்தப்படுகின்றனர், உடல்ரீதியான தாக்குதலுக்கு ஆளாகின்றனர். இந்த வன்முறைகளில் பெரும்பாலானவை நோயாளிகள் அல்லது அவர்களின் உறவினர்களால் செய்யப்படுகின்றன.

எனவே இனி பணியில் இருக்கும்போது எந்தவொரு சுகாதாரப் பணியாளர் மீதும் ஏதேனும் வன்முறை ஏற்பட்டால், குறைந்தபட்சம் 6 மணி நேரத்திற்குள் இது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர் ) பதிவு செய்யப்பட வேண்டும். இதற்கு அந்த மருத்துவமனை நிர்வாகமே பொறுப்பு” என்று மத்திய சுகாதாரத்துறை பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+